பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

கல்வி உளவியல் கோட்பாடுகள்



புலன்காட்சியே கற்றலுக்கு அடிப்படையாகும்; அறிவின் தொடக்கமுமாகும், அது வெளியுலகத்தைப்பற்றிய திட்டமான அநுபவம் பெறுவதற்கும் முதற்காரணமாகின்றது.

கற்பனை

மனத்தின் வியத்தகு ஆற்றல்களுள் ஒன்று கற்பனை. சாதாரண மக்கள் இல்லாததைப் படைப்பதையும் வானக் கோட்டைகளை எழுப்புவதையும் கற்பனை என்று கருது கின்றனர். உண்மையில் நிலைபேறில்லாப் பொருள்களை உண்டாக்கும் மனத்தின் ஒருவகையாற்றல் கற்பனையாகும். ஆற்றங்கரையில் இயற்கைச் சூழலினிடையே தனிமையாக உட்கார்ந்திருக்கும்பொழுது நம்முடையமனம் தட்டுத்தடை யின்றிப் பாவனை உலகங்களில் அலைகின்றது. வானத்திலுள்ள மேகங்களில் பிராணிகள், பறவைகள், கட்டடங்கள் ஆகிய வற்றின் வடிவங்களைக் காண்கின்றோம். சாதாரண நிகழ்ச்சி ஒரு சிறுகதை யாகின்றது. இவை யாவும் கற்பனையே. ஆனால், உளவியவில் கற்பனையை மிகவும் வரையறைப் படுத்திப் பேசவேண்டும். X

கற்பனை என்பது ஒருவகை அறிவுச்செயல். நம்முன் இல்லாத பொருள்களை மனத்தால் காண்பது கற்பனை. புலன்களைத் துரண்டும் பொருள்களைக் காண்பது புலன்காட்சி.; அப் பொருளின் தூண்டலின்றி அதே பொருளை அநுபவிப்பது படிமம்: அல்லது முதல்நிலைக் கற்பனை", சாயலின் அடிப்படை யாகவே உயர்நிலைக் கற்பனை எழுகின்றது. புலன் உணர்ச்சி பொருள்விளக்கம் பெறுவதால் புலன்காட்சிவயாதுபோல,படிமம் பொருள்பெற்றுக் கருத்தாக அமைகின்றது. எனவே, புலன் காட்சிக்குப் புலன் உணர்ச்சி மூலமாக அமைவதைப் போலவே, கருத்துக்குச் சாயல் அடிப்படையாக அமைகின்றது. -

ஆறுவகைப் புலன் உணர்ச்சிகளைப் போலவே ஆறுவகைப் படிமங்களும் உள்ளன. அவை: காட்சிப்புலன்: (எ . டு; படுக்கையறை, ஒரு நண்பன், மோட்டார். கேள்விப் புலன்; (எ . டு ஒரு குரல், பொறியொலி, நாய்குரைத்தல். மணப் படிமம்; (எ.டு) தவிட்டுமணம், மல்லிகைமணம், பலகாரமணம். சுவைப் படிமம்; (எ-டு) இனிப்புப் பொருள், மிளகாய்ச் சட்னி,

44. Likunth-image. - 45. Qpääjäjosué & Low-Primary imagination. 46. *(jää-Idea. . -