பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

கல்வி உளவியல் கோட்பாடுகள்



உணர்ச்சி நடைபெற்றுக்கொண்டே யிருக்கும். படிமத்திற்கு நேரான தூண்டலொன்று மின்மையால், நிலைத்த கவன முயற். சியைக் கொண்டே அதனை மனத்தின் முன் நிறுத்தக்கூடும். கவனம் கணந்தோறும் ஊசலாடுந் தன்மையதாதலின், படிமமும்

மாறிக்கொண்டே வருகின்றது.

• .. ميمونو هيستعميميسيه ميتتي تعرّ

(5) சாயல் அகவயத் தன்மையது; புலன் உணர்ச்சி புற வயத்தன்மையது. புலன் உணர்ச்சி தூண்டலால் அறுதியிடப் பெறுகின்றது; படிமம் தனியாளின் கவர்ச்சியால் தீர்மானிக்கப் பெறுகின்றது. -

(6) வுட்வொர்த்' என்பார் குறிப்பிடுவதைப்போல, புலன் உணர்ச்சியைவிட படிமம் நடைமுறைப் பயனிலும் குறை வுடையது. புலன் உணர்ச்சிக்கு அமைந்ததோர் புறப்பொருள் உண்டாதலின் நாம் அதை உற்று நோக்கி முன் காணாத உண்மைகளைக் காணலாம். படிமத்தில் அங்ஙனம் காணும் வாய்ப்பு இல்லை; அதில் கற்பனை உண்மைகளையே காண முடிகின்றது. -

கற்பனை வகைகள்: கற்பனையை மீள் ஆக்கக் கற்பனை", ஆக்கக்கற்பனை, அல்லது படைப்புக் கற்பனை" என இரண்டு வகையாகப் பிரித்துப் பேசுவர். ஒரு பொருளையோ, நிகழ்ச்சியையோ திரும்பக் காண்பது மீள்ஆக்கக் கற்பனை யாகும். நாம் ஒருமுறை பார்த்த தஞ்சைப் பெரிய கோயி லையோ சிற்றன்ன வாசலின் சிற்பத்தையோ நினைக்கின்றோம்; அல்லது முதல்நாள் கல்லூரி அல்லது தமிழ்ச்சங்கத்தில் நிகழ்ந்த வற்றைக் கருதுகின்றோம். இவ்வாறு நினைப்பதில் நம் மனத் தில் தோன்றும் கோயிலும் உண்மைக் கோயிலும் ஒற்றுமையுடை யவை; அங்ங்னமே நிகழ்ச்சியும் நிகழ்ச்சியின் படிமமும் ஒற்றுமையுடையவை. இவை மீள் ஆக்கக் கற்பனைக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். நினைவு, மீள் ஆக்கக் கற்பனையாகும்; புலன் காட்சியில் தோன்றியதே மீண்டும் மனத்தில் தோன்று கின்றது. உயர் கற்பனையில் பழைய அநுபவங்களைக் கொண்டே புதிய சேர்க்கையை ஏற்படுத்திக் கொள்ளுகின்றோம். |எ.டு. பாற்கடல், பொன்மலை, கற்பகத்தரு, காமதேனு. இவை முன்னைய அநுபவங்களை அடிப்படையாகக் கொண் டவை. சிறுகதை ஒவியங்கள், புதினங்கள், அறிவியல் கொள்கை கள், கவிதைகள் ஆகியவை யாவும் ஆக்கக் கற்பனைக்கு எடுத்துக்

یہی-حمہم م=بینہ- بیب:

49. al-Qaisrifă-Woodworth. - - - - 50. 18.jr 4ésà oðusosw-Reproductive imagination. 51. 44 sé silicos-Productive or creative imagination.