பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

255



காட்டுகளாகும். பகற்கனவும், கனவும் படைப்புக் கற்பனையின் தோற்றங்களே. நாம் வாழ்க்கையில் கொள்ளும் உயர்ந்த குறிக் கோள்களும், குழந்தைகளின் பாவனைகளும் படைப்புக் கற்பனையின் கூறுகளே. சிந்தனையிலும் இக்கற்பனைக்குச் சிறந்த இடம் உண்டு.

   ஆக்கக் கற்பனையை மேலும் மூவகையாகப் பகுத்துப் பேசலாம்.
   (1) பயன்வழிக் கற்பனை: சீமை இலங்தைப்பழம்' பூமியில் விழுந்ததைக் கண்டு புவியீர்ப்பு விசை விதியைக்கண்ட சர் ஐசாக் கியூட்டனும், நீராவிப் பொறியைக் கண்டறிந்த ஜேம்ஸ் உவாட் ஸ்டீவென்சனும், கம்பியில்லாத்தந்தி' யைக் கண்டறிந்த மார்க்கோனியும், பேசும் படத்தைக் கண்டறிந்த தாமஸ் ஆல்வா எடிசனும், ஆகாயவிமானத்தை கண்டறிந்த ரைட் சகோதரர் களும் நுண்ணணுப்பெருக்கி" தொலைநோக்கி , ஒலிவாங்கி , தந்தி போன்ற சாதனங்களைக் கண்டறிந்த அறிவியல் மேதை களும் பயன்வழிக் கற்பனைகளைக் கையாள்பவர்கள்.
   (2) முருகுணர் கற்பனை: கவிஞர்களும், இசைவாணர்களும் ஒவிய வல்லுநர்களும், சிற்பத்திறன் மிக்கவர்களும், சுதை வேலைக்காரர்களும், வண்ண வேலைத்திறன் படைத்தோரும் முருகுணர் கற்பனையாளர்கள் ஆவர். கம்பர், சயங்கொண்டார் போன்றவர்களின் கவிதைத் திறனும் இரவிவர்மா போன்றவர் களின் கைவண்ணமும் அவர்களுடைய முருகுணர் கற்பனையின் பயனே. 
   மேற்கூறிய இரண்டு கற்பனை வகைகளையும் படைத்தல் கொள்ளுதல் என்றும் பாகுபடுத்தலாம். புதிதாக ஒரு பொறியினைப் புனைந்தியற்றி விளக்குதல் பயன்வழிப் படைப்பாக்கக் கற்பனையாகும். பொறியியல் மாணாக்கன் இவ்விளக்கத்தைப்

52. §36567-Thinking. - - - 53. Lusitaspolé à fluor-Pragmatic imagination. 54. சீமை இலந்தைப்பழம்-Apple. 55, கம்பியில்லாத் தந்தி-Wireless. 56. ஆகாய விமானம்-Aeroplane. 57. நுண்ணணுப்பெருக்கி-Microscope. 58. தொலைநோக்கி-Telescope. 59. 5s amäS-Microphone. - 60. &#9-Telegraph. 61. gp(5@5&rif &ffus'har-Aesthetic imagination.