பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய'மூலக்கூறுகள் 懿针

பழைய அநுபவத்தால் அதன் வெற்றுத்துரண்டலைவிட நுட்ங் கானதொரு பொருளை அதில் காண்கின்றோம்.

(2) கருத்துகள்19: சிந்தித்தவில் பெரும்பாலும் கருத்து கிலையை அதிகமாகக் காண்கின்றோம். மனப்படிமங்களையும்' வெற்றுகிலை உணர்வு' களையும் கையாளுவதே கருத்துநிலை எனப்படுவது. புலனிடான பொருள்களையும் இயக்கங்களையும் கையாளுவதற்கு மாறாக, சிந்தனையில் கருத்து நிலைச் செயலும் கருத்துகளைக் கையாளுதலும் நடைபெறுகின்றன. கருத்து ஓர் அறிவு ஈயும் மனநிலை; அது மிக உயர்தர பொருண் மையைக் கொண்டது. இந்நிலையில் அதனை நம்முடைய எண்ணத்தைத் தெரிவிக்கும் ஒரு கோலம் அல்லது ஏற்பாடு எனக் கருதலாம். அது புலன் காட்சியாகவும் இருக்கலாம்; கற்பனை யாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, நாம் ஏதாவது ஒரு பொருளை நோக்கும்பொழுது நாம் காண்பதும் நாம் பொருத்தும் கோலத்தைப் பொறுத்தது. இங்குள்ள வரை படத்தை (படம் 28) மடிப்பு வெளிப்புறமாகவோ உட்புற மாகவோ உள்ள ஒரு மடித்த தாள் எனக் கருதலாம்; அல்லது ஒரு கணித வல்லுத ருக்கு அது ஒரு பக்கத்தைப் பொதுவாகக் கொண்ட இரண்டு சமமான இணைகரங் களாகத் தோன்றலாம். எல்லாம் பார்ப்ப வரது மனநிலையைப் பொறுத்தது. கருத் களை உண்டாக்கும் நம்முடைய திறனைப்

படம் 28 பொருத்தே கருத்துகிலைச் செயல்முறை

- பும் பொதுமைப்படுத்தும் செயல்முறை யும் நடைபெறுகின்றன. கருத்து என்பது பொதுமைப்படுத்தப் பெற்ற படிமம்; அது நேர் அநுபவத்தின் அடிப்படையில் அமைத் திருக்க வேண்டுமென்பதில்லை. ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி நம்முடைய அநுபவங்களனைத்தினையும் அது தாங்கி நிற்கின்றது. நாய்' என்ற கருத்து (பொது உணர்வு) ஒரு குழந்தையிடம் எவ்வாறு உண்டாகின்றது என்பதை முன்னர்க்

72. &@553-Concept.

73. 5(555/560 al-Ideation.

74. Losariliutą Lotò-Mental image.

75. Gasbossmava-Gsorffa-Abstraction.

76. sq5#5Ipñso6Jé# Gléfuójgp6wp-Process of ideation,

77. பொதுமைப்படுத்தும் செயல்முறை.Process of apstraே

tion. -