பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

கல்வி உளவியல் கோட்பாடுகள்


கூறியதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். பொருள் கருத். துகளைப் பயன்படுத்துதல் கற்றலுக்கு இன்றியமையாதது. நனவு, மையத்தில் தெளிவு படுத்துவதற்குப் படிமத்தைவிடக் கருத்து மிகப் பெரிது. கருத்து ஒரு நுண் பொருள். பொதுமைப் படுத்து தலால் பெறும் சிக்கனத்தால் சிந்தனை சிறப்பாக நடைபெறு கின்றது. புலன் உணர்ச்சி-புலன்காட்சி-பொது உணர்ச்சி என்ற ஒழுங்கில் கருத்து வளர்கின்றது.

(3) குறியீடுகளும் அடையாளங்களும்: குறியீடுகளாலும்[1] அடையாளங்களாலும்[2] சிந்தனை சிக்கனமாக நடைபெறுகின்றது. ஒவ்வொரு குறியீடும் அடையாளத்தின் வன்மையைக் கொண்டுள்ளது. அங்ஙனமே ஒவ்வொரு அடையாளமும் குறியீடாகவும் கூடும். எனவே, இவ்விரண்டையும் ஒருங்கே ஆராய்வோம். ஒரு குறியீடு பொதுமைக்குப் பதிலாகப் பயன்படும் தனிப் பிழம்புப் பொருளாகும். பசுவைப்பற்றிய கருத்தை உணர்வதற்குத் தனிப் பசுவை மனத்தில் காண்கின்றோம். இந்திக்குங்கால் கருத்துகளைக் குறியீட்டின் வாயிலாகவே கூறுகின்றோம். 'நான்கு' என்னும் சொல் நான்கென்னும் கருத்தைக் காட்டும்; இதே கருத்திற்கு '4' என்பது வேறொரு குறியீடாகும். சென்னை எழும்பூர் இருப்பூர்தி நிலையத்தருகில் நான்கு சாலைகள் சேரும் இடத்தில் அமைக்கப்பெற்றிருக்கும் செவ்விளக்கு ஒரு பக்கத்தில் தோன்றுங்கால் அப்பக்கத்திலுள்ளவர்கள் சாலையைக் கடக்கக் கூடாது என்பதற்கும், பச்சை விளக்கு தோன்றியதும் கடக்கலாம் என்பதற்கும் அவை குறியீடுகளாம். குறியீடு கருத்தைக்காட்டிலும் எளியது; எளிதிலும் பயன் படுவது. எனவே, குறியீடு மூலமும் சிந்தனையில் சிக்கனத்தைப் பெதுகின்றோம். குறியீடுகள் நாளடைவில் அடையாளங்களாகின்றன. இவை சிந்தனைக்கும் செயலுக்கும் அடையாளங்களாகும். இவை இயக்கத் துலக்கங்களைத் தூண்டுகின்றன. சிவப்பு ஒளியும் பச்சை ஒளியும் அடையாளங்கள். இவை நம் செய்கையை அறுதியிடுகின்றன; நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை அவை குறிப்பிடுகின்றன. எனவே, குறியீடுகள் அடையாளங்களாகிச் சிந்தனைச் செயலைச் சிக்கனமாகத் தூண்டுவிக்கின்றன.

ஒரு பெரிய சிக்கலான கருத்திற்குப் பதிலாக ஒரு குறியீட்டை மேற்கொள்ளுவதால் சிந்தித்தல் விரைவாகவும் திறமையாக வும் நடைபெறுகின்றது. இடையில் சிந்திப்பதை நிறுத்தினாலும்


  1. குறியீடுகள்-Symbol.
  2. அடையாளம்-sign.