பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

265




(1) ஒரு பிரச்சினையை உணர்தல்: நம் வாழ்வில் நேரடியாகக் குறுக்கிடும் பிரச்சினைகளை நாம் நன்றாக உணர்கின்றோம். ஒரு பிரச்சினையில் நாம் உணரும் குறையொன்றை நிரப்பவே சிந்தனை எழுகின்றது. கற்றல் முறைகளிலும், இன்பம் எய்தும் முறைகளிலும் ஒரு குறையைக் கண்டுணர்ந்த பின்னரே சிந்தனை எழுகின்றது. குளிக்கும் அறையில் குழவியுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் ஒரு சமயம் “தண்ணீர் எவ்வாறு வருகின்றது?” என்று எண்ணுகின்றான். இஃது உண்மையான பிரச்சினை; இஃது அவனது விடுப்பூக்கத்தைத் தூண்டுகின்றது.

(2) தேவையான பொருந்தக்கூடிய எடுகோள்களைத் திரட்டுதல்: பிரச்சினைக்குத் தீர்வுகாணக்கூடிய எடுகோள்களைத் திரட்டவேண்டும். தம்முன் நிற்கும் நிலையை உற்று நோக்கி ஆராய்தலால் இவற்றைப் பெறலாம். ஆசிரியர் மாணாக்கர்களிடம் ஒழுங்கான முறையில் பழக்கத்தை வளர்த்தால் மாணாக்கர்கள் இத்துறையில் நற்பயன் அடைவர். இவ்வாறு பெற்ற எடுகோள்களை81 ஒழுங்கான முறையில் அமைத்தல் வேண்டும். இஃது ஒர் எடுகோளைப் பிறிதொரு எடுகோளுடன் ஒப்பிட்டு ஆய்வதற்கு வசதியாக இருக்கும்.

(3) பொருந்தாத முடிவுகளைப் புறக்கணித்தல்: மேலே திரட்டிய எடுகோள்களில் சில பிரச்சினைக்குப் பொருந்தாமல் இருக்கலாம். அவை எவை என ஆய்ந்து அவற்றை நீக்குதல் வேண்டும். சில சமயம் திடீரென்று ஒரு ஊகம் தோன்றக்கூடும். அது பிரச்சினைக்கே தீர்வு காணக்கூடியதாகவும் இருக்கும். இது நெடுநாள் பயிற்சியினாலேயே ஏற்படும்.

(4) சரியான முடிவுகளை மதிப்பிடல்: நாம் ஒரு கருதுகோளை82 (கற்பிதக் கொள்கை) அமைத்துக்கொண்டு அதைச் சோதிக்க மேலும் விவரங்களைத் திரட்டுகின்றோம். பலதடவை இவ்வாறு செய்யுங்கால் முதற்கொள்கை நீக்கப்பெற்று வேறொரு கொள்கையும் தோற்றுவிக்கப் பெறுகின்றது; அதனையும் இவ்வாறே ஆராய்கின்றோம்.

முடிவுகளைப் புறவயமுறையில்83 சோதித்துத் திருத்துதல்: நாம் சிந்தித்துக்கண்ட முடிவுகளைச் சோதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்கின்றோம். அவை கொடுக்கப்பெற்ற நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்; அவை நன்கு நிறுவப்


81. எடுகோள்-Data.

82.கருதுகோள்-Hypothesis.

83. புறவய முறையில் -Objectively.