பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

கல்வி உளவியல் கோட்பாடுகள்



(3) மாணாக்கர்கள் ஒருவரையொருவர் வினாவும் வினாக் களுக்கு விடை காணல் வேண்டும். ஒருவருக்கு விடை தெரிந்திருந்தால், அது மீள்நோக்காக அமைகின்றது; தெரியா திருந்தால் அது கற்பதாகின்றது. இன்னும் மாணாக்கர்கள் எத்தனையோ முறைகளைக் கையாளுகின்றனர். அவை யாவும் பதிவித்தலில் பங்கு பெறுகின்றன. நன்னூலாரும்,

  • அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால்

செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும்.'

என்று கூறியிருத்தல் ஈண்டு சிந்தித்தற்குரியது.

(4) ஆசிரியரைப் பொறுத்தவரை கற்பிக்கும் பாடத்தை எல்லாப் புலன்களும் உணரும் வண்ணம் கற்பிக்க வேண்டும். புலப்பயிற்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட புலன்கள் அறிபவை நன்றாகப் பதிகின்றன, நன்கு நினைவிலிருத்தப் பெறுகின்றன என்பதை அறிவோம். எடுத்துக்காட்டாக, ஆங்கிலப் பாடத்தில் புதிய சொற்களைக் கற்பிக்கும்பொழுது ஆசிரியர் சொல்லை ஒலிக்கின்றார்; எழுத்துக் கூட்டுகின்றார்; வகுப்பிலுள்ளவர் களை ஒலிக்கச் செய்கின்றார்; எழுத்துக் கூட்டச் செய்கின்றார். பிறகுதான் கரும்பலகையில் எழுதி, மாணாக்கர்களைப் பார்த்தெழுதச் செய்கின்றார். இங்ங்னம் மாணாக்கர்கள் பார்த்தலாலும், கேட்டலாலும், எழுதுவதாலும் அவர்கள் முறையே காட்சிப்புலன், கேள்விப்புலன், தசையியக்கப்புலன் அநுபவங்களைப் பெறுகின்றனர். இப்பல்.புலன் தாக்குதல் அச்சொல்லை நன்கு மனத்தில் பதிக்கின்றது. - : , .

இருத்துதல்: இருத்துதல்' மனிதருக்கு மனிதர் மாறுபடு கின்றது. இருத்தும் திறன் அப்பொருள் மூளையில் விழும் துலங்கல் சுவடுகளைப் பொறுத்தது. மனத்தில் இருத்தப் பெற்றுள்ளவை அங்கு மனநிலைகளாகப் படிந்துள்ளன. இளமையில் நிகழ்ந்தவற்றை நாம் இப்பொழுது நினைவு கூர்வதிலிருந்து அவ்வநுபவங்கள் மனத்தில் இருத்தப் பெற்றுள்ளன என்பது திண்ணம். நாம் வழிபாட்டுப் பாடல் களைப் பல நாட்கள் சொல்லாவிடில் அவை மறந்து போனவை யாகத் தோன்றலாம். அவற்றை மூன்று நான்கு முறை சொன்ன வுடன் அவை மீட்டும் பாடமாகி விடுகின்றன. இதிலிருந்து முன்னநுபவங்கள் மனத்தில் ஒருவாறு இருத்தப்பெறுகின்றன

102. ı86ir (35rrăg.Review.

103. நன்னூல்.நூற்பா. 45.

104. GG#Gsso-Retention.

105. Leew flowser-Dispositions.