பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

கல்வி உளவியல் கோட்பாடுகள்



ஏற்படுகின்றது என்பதை விளக்கியுள்ளோம். ஒரே சொல்வின் கருத்து ஆளுக்கு ஆள் மாறும் என்பதையும் உய்த்துணர வேண்டும். ஊர்க்காவலன் என்பதன் கருத்து நமக்கு ஒன்று; திருடனுக்கு வேறொன்று; அதிகாரிகளுக்குப் பிறிதொன்று. சொற்களின் பொருள் இடத்திற்கேற்றவாறு மாறும். (எ.டு) மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் தேர்தலில் 60 விழுக்காடு மக்கள் வாக்களித்தனர்' என்ற சொற்றொடர்களில் மக்கள் என்ற பொருளை அறிக. - - - r

பொருள் அநுபவத்தைப் பொறுத்திருப்பதால் சரியான பொருள் குழந்தையிடம் அமைய வேண்டுமானால் அது பல்வேறு பொருள்களைப் பல்வேறு அநுபவங்கள் மூலம் அறிய வாய்ப்பு தருதல் வேண்டும். பள்ளிகளில் அடிக்கடி சிறு தொலைவுப் பயணம் மகிழ்ச்சிச் செலவு போன்றவற்றாலும், கற்பித்தலில்நவீன முறைகளைக் கையாளுவதாலும் குழந்தை களிடம் அநுபவங்களைப் பெருக்கலாம். . . -

பொதுமைப்படுத்துதல்'

குழந்தைகள் பொருள்களின் பொதுத்தன்மையை அறியச் செய்வது கல்வியின் நோக்கங்களில் ஒன்றாகும். பொதுக் கருத்தின் தன்மை யாது? பொதுமை காணும் முறை எவ்வாறு நிகழ்கின்றது? சிந்தனையிலும் பிறருடன் உரையாடும்பொழுதும் தனிப்பட்ட பொருள்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மட்டிலும் கையாண்டால் அம்முறை கட்டுக்கடங்காது நீளும். ஆகையால், மனித அநுபவத்தை வகுத்து ஒரு சொல் குறியீட்டுத் தொகுதிக்குப் பதிலாக ஒரே சொல்லை வழங்குதல் நமக்குப் பயன் தருவதாகும். கல்வி என்ற ஒரே சொல்லில் எத்தனையோ கருத்துகள் அடங்கியிருத்தல் கவனித்தற்பாலது. நம்முடைய அநுபவங்களையெல்லாம் ஒழுங்குபடுத்திச் சுருக்கினால்தான் அவை விழுப்பொருள் பயக்கும். . - .

பொருளுக்கு முந்தியது அநுபவம் என்பதை நாம் அறிவோம். ஆயினும், அநுபவத்தின் வெற்றுத் தொகுதிகளால் யாதொரு பயனும் இ ல் ைல. அநுபவங்களைத் தொடர்புபடுத்தி அமைப்பதே சிறந்ததாகும். இதன் பயனாக ஒரு பொருளை முதலில் கண்ட நிலை தவிர வேறு அமைப்புகளிலும் காண முடிகின்றது. எடுத்துக்காட்டாக பொதுமையின் வன்மையால்

126. assifáām suspsár-Policeman. . 127. சிறு தொலைவுப்பயணம்-field trips. 128. Gum geoloral Gäää-Generalisation.