பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 岔懿针

தரும் விளக்கம், உளவியல் முறையில் பழக்கங்கள் கற்கப் பெற்ற மனநிலைகள்' அல்லது வாசனைகள், இவை மனத் தின் இருத்தும் ஆற்றலைப் பொறுத்தவை. பழக்கங்கள் உடற் செயல்களை மட்டிலும் குறிக்கா; அவை சிந்தனையையும் குறிக்கும். சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப் பழக்கம்' என்ற பழமொழியை எண்ணி மகிழ்க. பிறரை ஐயுறுதல், இரு பொருள்படப் பேசுதல், புறங்கூறுதல், வந்த கடிதங்கட்கு உடனே பதில் எழுதுதல் போன்றவை யாவும் பழக்கங்களே.

பழக்கம் அமைதலால் ஏற்படும் நடைமுறைப் பயன்கள்: பழக்கச் செயல்களுக்கு முயற்சி தேவையில்லை. இத்தகைய செயல்களுக்கு அளிக்கப்பெறும் தனவுக் கவனம் மிகக் குறைவு. உடல் வளைந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட வனும் படிப்பதில் எவ்வித முறையான பழக்கம் இல்லாதவனும் தேர்வுக் காலத்தில் படிப்பதை உற்று நோக்கினால் இவ்வுண்மை விளங்கும். குழந்தை எழுதக் கற்றல் மிகவும் துன்பம் பயப்பது. அஃது ஒவ்வொரு எழுத்தின் அமைப்பையும் கவனிக்க வேண்டும், ஒவ்வொரு சொற்களையும் எழுத்துக் கூட்டவேண்டும்; இவற்றை எண்ணற்ற தடவைகள் செய்ய வேண்டும். தன்னு டைய முழுக்கவனத்தையும் எழுதும் செயலின் ஒவ்வொரு பகுதி யிலும் செலுத்த வேண்டும். ஆனால், ஆசிரியர் ஒரு வாக்கியத் தைக் கரும்பலகையில் எவ்வளவு எளிதாக எழுதுகின்றார்: பழக்கத்தின் வன்மையால் முதியோரின் எழுதும் செயல் தானாக நடைபெறுகின்றது. -

பழக்கம் என்பது ஆற்றல் அழியா விசை, அதனால் உள ஆற்றலும் உடல் ஆற்றலும் சிக்கனமாகச் செலவழிகின்றன. நடைமுறையில் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் வருமாறு:

(1) களைப்பைக் குறைத்தல்: பழக்கம் களைப்பைக் குறைக்கின்றது. ஒரு விளையாட்டை முதன் முதலில் விளை யாடும்போது அதிகக் களைப்படைகின்றோம். முதல் முதலாகச் சீறியாழ் இயக்கக் கற்றதனையும் முதன் முதலாகத் தட்டச்சுப் பொறியினை இயக்கக் கற்றதனையும் நினைவு கூர்க. இரண் டிலும் விரல்கள் நோவெடுத்ததையும் கண்டீர்களன்றோ? நாளடைவில் அவை வேலைகள் செய்வதை நாம் உணர்வதே இல்லை. -

(2) இயக்கங்களை எளிதாக்குதல்: பழக்கம் இயக்கங் களைத் திட்டமாக்குகின்றது; தவறுகளைப் போக்குகின்றது.

131. 10&gososu-Disposition.