பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/309

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

கல்வி உளவியல் கோட்பாடுகள்


அது வேறுபடும். தூண்டப்பெறுபவர்கட்குத் தூண்டலை உண்டாக்குபவரிடம் ஏற்படும் அச்சம், நம்பிக்கை அல்லது அன்புபோன்றவையே கருத்தேற்றம் ஏற்படுவதற்குக் காரணங்களாகும்.

விளம்பரம் செய்வோர் கருத்தேற்றத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். ஏதேனும் ஒரு பொருள் விற்பனைக்கு வந்ததும் வணிகர்கள் அதைக் குறித்த விளம்பரங்களை மக்கள் திரளாகக் கூடுமிடங்களிலெல்லாம். ஏராளமாக ஒட்டுகின்றனர்; அதைப்பற்றிய துண்டுப் பிரசுரங் களை வழங்குகின்றனர். அவை இலட்சக்கணக்கான பத்திரிகைப் படிகளிலும் அச்சாகின்றன. அதை நாம் நாடோறும். பார்க்கின்றோம். ஆயிரக்கணக்கான முறை பார்ப்பதால் அது நம்முடைய மனத்தில் நன்கு பதிந்து விடுகின்றது. நாம் என்றே, னும் சோர்வுற்ற சமயம் பார்த்து அப்பொருள் நம் இல்லத்துக் குள்ளும் நுழைந்து விடுகின்றது. மறுநாள் நண்பர்களிடமும், அதைப்போல் சிறந்தது இல்லை என்று புகழ்ந்து பேசத் தொடங்கி விடுகின்றோம். கட்சிப் பிரசாரத்தில் கருத். தேற்றத்தைத் திறமையாகக் கையாளுகின்றனர்; சமய மாற்றத்திலும் அப்படியே.

கற்றலில் இதன் பயன்: ஆசிரியர் என்பவர் சிறந்த ஒழுக்க சீலர்; நிறைந்த அறிவுடையவர். எனவே, அவர் திமை பயப்பவற்றை மாணாக்கர்களிடம் கருத்தேற்றம் செய்யார். சமூகம் அவரைப் பொறுப்பான நிலையில் வைத்துள்ளது. தன்னுடைய சமயக்கருத்தினையோ அரசியல் கருத்தினையோ ஆசிரியர் மாணாக்கர்களிடம் கூறுதல் கூடாது. அவர்கள் மாணாக்கர்களிடம் உண்மை காணும் திறனாயும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்; மானிட இனம் இதுகாறும் கண்டுள்ள சிறந்த அநுபவத்தையும், உயர்ந்த குறிக்கோள்களையும். அவர்கள்முன் வைக்க வேண்டும். வளர்ந்துவரும் சிறுவர் சமுதாயம், அவற்றிலிருந்து தத்தமக்கு வேண்டியவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வர்.

விளையாட்டு

விளையாட்டு முறையில் கற்பித்தலையும் விளையாட்டிைப் பற்றி உளவியலார் கூறும் கொள்கைகளையும் ஐந்தாம் இயலில் கூறினோம். சிறுவர்கள் இயல்பாகவே விளையாடும் தன்மையுடையவர்கள்; இச்செயல் அவர்களிடம் தானாகவே தோன்றுகின்றது; அதன் பொருட்டே சிறுவர்கள் விளையாட்டில் ஈடுபட்டுத் துய்க்கின்றனர். விளையாட்டு சிறுவர்களிடம் உடல்