பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் 2.99.

ஆயத்தம் செய்தார். பினேயின் சோதனைகளில் ஆராய்ந்து தேர்ந்தனவும் எளிதில் மதிப்பிடக் கூடியனவுமான பல புதிர் நிலைகள் அடங்கியிருந்தன. இப்புதிர் நிலைமைகள் பல திறத் தன்மையுடையனவாகவும், குழவிகளின் சூழ்நிலை வேற்றுமை களால் அதிகம் பாதிக்கப்பெறாதனவாகவும், பொருளற்ற நினைவினைவிட தீர்மானம், அனுமானம் ஆகிய பண்புகளை அதிகம் அடக்குவனவாகவும் அமைந்துள்ளன.

மன வயது: பினே தான் கண்டறிந்த அளவுகோலைக் கொண்டு தன் மேற்பார்வையிலிருந்த பிற்போக்கான குழவி களை ஆராய்ந்தார். அவர்கள் தம் வயதிற்கு ஏற்ற அறிவுநிலை அற்றுக் கிடந்தமை வெளியாயிற்று. குழவிகட்கு வயது எட்டாக இருக்கும்; ஆனால், அவர்கள் ஐந்தாம்யாண்டுக் குழவிகள் விடையிறுக்கும் வினாக்கட்கு மட்டிலுமே விடையிறுக்க வல்லவர் களாக இருப்பர். ஆதலின், அறிவுநிலை ஐந்தாம் யாண்டிற்கு உள்ளது போலவே விளங்கியது எனலாம். அறிதிறன் ஆய்வு களால் நாம் உணரும் வயதினை மனவயது என்ற பெயரால் குறித்தார் பினே. குழந்தையின் உண்மை வயது காலவயது' என வழங்கப்பெற்றது. இதை ஒர் எடுத்துக்காட்டால் விளக்குவோம். 6, 7, 8 வயதுள்ள மூன்று குழந்தைகள் ஏழாம் யாண்டுக்குரிய ஆய்வினுக்குச் சரியாக விடையிறுப்பதாகக் கொண்டால்: இம்மூவருக்கும் மனவயது ஒன்றே, அஃதாவது ஏழு. 5, 7, 8 கால வயதுடைய இவர்களில் முதலாமவனை நிறைமதியுடையவன் என்றும், இரண்டாமவனைச் சாதாரண (சராசரி) அறிவுடை யவன் என்றும், மூன்றாமவனை மந்த அறிவுடையவன் என்றும் கூறுகின்றோம். & .

பினே அளவு கோலில் மாற்றம்: பினே தற்காலிகமாக 1905-இல் இயற்றிய சோதனை அளவைகளில் பினேயும் சைமனும் மீண்டும் மீண்டும் திருத்தங்கள் செய்து 1908-லும், 1911.லும் வெளியிட்டனர். அமெரிக்காவில் சோதனைகளைத் தழுவியும் திருத்தியும் 1911-ல் காரார்ட் என்பாரும் 1912-ல் மான் என்பாரும், 1916-ல் ஸ்டான்போர்டு பல்கலைக் கழத்தைச் சேர்ந்த டெர்மன் என்பாரும் வெளியிட்டனர். 1916-ல் வெளி யிடப் பெற்ற சோதனைகள் இருபது யாண்டுகளுக்கு மருத்துவ உளவியலிலும், உள்ளப் பாகுபாட்டிலும், கல்வி ஆலோசனை யிலும் பொது அளவையாகத் திகழ்ந்தன. 1937-ல் டெர்மன், மெரில் என்னும் இருவர் இந்தச் சோதனைகளில் காணப்பட்ட குறைகளைக் களைந்து மீண்டும் திருத்தியமைத்து வெளி

8. Loorsuugis-Mental age. 9. sma aluga-Chronological age.