பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

கல்வி உளவியல் கோட்பாடுகள்



விட்டனர். இந்தச் சோதனைகள் இன்று அமெரிக்காவில் எங்கனும் பெருவழக்காக உள்ளன. இந்தச் சோதனைகள் தனியாள் சோதனைகள்'. இவற்றைக் கொண்டு ஒவ்வொரு வராகத்தான் சோதிக்க இயலும்.

  குழு அறிதிறன் சோதனைகள்: பினேயின் சோதனைகளைக் கையாளுவது கடினமாக இருப்பதாலும், அவற்றை ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாகக் கொடுக்கவேண்டியிருப்பதாலும், அவை ஆசிரியர்களுக்குச் சிறிதும் நடைமுறையில் பயன்படவில்லை. ஆகவே, உளவியலார் பல குழந்தைகட்குச் சேர்ந்தாற்போல் கொடுக்கவல்ல குழு அறிதிறன் சோதனை களைக் கண்டறிந்தனர். முதலாம் உலகப் பெரும்போர்க் காலத்தில் இச்சோதனைகள் முதன்முதலில் அமெரிக்காவில் தோன்றின. அமைதிக் காலத்தில் ஒவ்வொருவரையும் தனித் தனியாகச் சோதிக்க அவகாசம் கிடைக்கும். ஆனால், போர்க் காலத்தில் அவசரமாகப் பலரை ஒரே காலத்தில் சோதித்து அறியவேண்டிய நிலைமையுண்டாகும். அதற்குக் குழுச் சோதனைகள்தாம் பெரிதும் பயன்படும். அமெரிக்காவில் . ேபார்க் காலத்தில் பயன்பட்டவற்றுள் முக்கியமானவை இராணுவ ஆல்பா - சோதனைகள், இராணுவ பீட்டா. சோதனைகள் ஆகும். முன்னவை கற்றோரைச் சோதிப்பதற்கும் பின்னவை கல்லாதவரைச் சோதிப்பதற்கும் பயன்படுத்தப் பெற்றன.  
  அறிவுச் செயல் சோதனைகள்: சில சமயம் நாம் சோதிக்க விரும்பும் மக்களுக்குச் சோதனைகள் அமைந்துள்ள மொழி தெரியாமலிருக்கலாம். மேலும், சிற்றுார்வாசிகளுக்கு எளிதில் எட்டாத உலக விவகாரங்களைப்பற்றியும் சோதிக்கவேண்டிய தேவை ஏற்படலாம். இத்தகைய சமயங்களில் பயன்படுத்தப் பெறும் சோதனைகளை அறிவுச் செயல்கள் சோதனைகள்: என வழங்குவர். இச்சோதனைகளைக் கொண்டு சோதிக்கப் பெறுபவர் எதையும் வாய்மொழியாகச் சொல்ல வேண்டியதில்லை; செய்து காட்டினால்போதும். எடுத்துக்காட்டாக பல வடிவமான மரத்துண்டுகளை ஒரு மரப்பலகையினின்றும் வெட்டி யெடுத்து இவர்களின் எதிரேவைத்து வெட்டியெடுத்த அத்துண்டுகளை மீட்டும் வெட்டியெடுக்கப்பெற்ற இடங்களில்

10. ścoffurer Gomgoas sci-Individual tests. 11. SGp so Zgosér GSFTS so sorsair-Group tests of

intelligence. - -

12. Mosai;0&ué. Gem'ssoorasir-Performance tests.