பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் 30, 1

எவ்வாறு பதிய வைக்கின்றனர் என்பதனைக் கவனித்தால் பொருத்த முணரும் அறிவு எவ்வாறு அவர்களிடையே வளர்ந் துள்ளது என்பதை அறியலாம். ஒவ்வொரு துண்டினையும் பொருத்துவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம், அவர்கள் தவறு செய்தல்களின் எண்ணிக்கை ஆகியவற்றையெல்லாம் குறித்து வைத்து ஒப்பிட்டு நோக்கினால் வயதிற்கேற்ப இவை மாறி வருவதனைக் காணக்கூடும். இத்தகைய பொது நிலை அளவு கோலைக்கொண்டு எல்லாக் குழந்தைகளின் அறிவுநிலையையும் அளந்தறியலாம்.

அறிதிறன் ஈவு

இக்காலத்தில் அறிதிறன், அறிதிறன் ஈவு’ என்பதன் வாயிலாக மதிப்பிடப்பெறுகின்றது. அறிதிறன் ஈவு என்பது மணவயதை உடல் வயதால் வகுத்து வரும் பின்னமேயாம். அறிதிறன் சவு பின்னமாக இருப்பதைவிட முழு எண்ணாக இருந்தால் சொல்லுவதற்கு எளிதாக இருக்குமாதலின் அந்தப் பின்னத்தை 100-ஆல் பெருக்கி வழங்குவதே இப்போது பெருவழக்காகிவிட்டது. அந்தப் பெருக்குத் தொகையே அறி திறன் ஈவு (அ-ஈ) ஆகும்.

இதை எடுத்துக்காட்டால் விளக்குவோம். பரந்தாமனின் வயது 12 யாண்டு 6 மாதம். அவனது மனவயது 14 யாண்டு 2 மாதம், அவனது அறிதிறன் ஈவு யாது?

மன வயது = 14 ஆ. 2 மா. = 170 மாதம்

கால வயது = 12 ஆ. 6 மா. = 150 மாதம்

மன வயது- 479 – 1 13

அ. சி. கால் வயது - 150

அதாவது, அ. ச. = 1. 13x100=113.

ஆகவே, பரந்தாமனின் அ. ஈ. = 113. அறிதிறன் ஈவைக்கொண்டு குழந்தைகளின் அறிதிறனை ஒப்பிடுவது எளிதாகும். இதையே,

Ö0 - q_ అగ్గMA என்ற ஒரு வாய்பாட்டு முறையில் அமைத்துக் கூறலாம்.

இங்கு IQ என்பது அறிதிறனையும், MA என்பது மன வயதினை யும் CA என்பது கால வயதினையும் குறிக்கின்றன.

13. 3/59 psi, os-Intelligence quotient.