பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும்

303



  ஒருவர் ஒர் அறிதிறன் ஆய்வில் பெற்ற மதிப்பெண்ணில் இருபகுதிகள் உள. ஒரு பகுதி அவருடைய பொதுத் திறனுக்கேற்றவாறும் மற்றொரு பகுதி அவருடைய தனித்திறனுக்கேற்ற வாறும் அமையும். ஆகவே, எந்த ஆய்வும், g-யையும் s-யையும் அளக்கின்றது. அவ்வாய்வின் சில பகுதிகள் g-ஐ அதிகமாகவும், சில பகுதிக்ள் s-ஐ அதிகமாகவும் அளத்தல் கூடும். பொதுத் திறன் அமையப்பெற்றவர்கள் பல துறைகளிலும் திறமைசாலி களாகத் திகழ்வர்; ஏனெனில், அனைத்திலும் பொதுத்திறன் பங்கு பெறுகின்றது. சிலரிடம் பொதுத்திறன் குறைவாக விருப்பதால் அவர்கள் பல துறைகளில் திறமைசாலிகளாக இருப்பதில்லை. ஆயினும், இவர்களிடமும் சில தனித்திறன்கள் உள்ளன. (எ.டு ): பூச்சு வேலை, நாட்டியம், இசை போன்றவை. பொதுத்திறனும் சிறப்புத்திறனும் கலந்தே செயற்படு கின்றன என்பது அறிதிறன்பற்றிய புதிய கொள்கை. இதை இரு-மூலக்கொள்கை' என உளவியலார் வழங்குவர்.
  தர்ஸ்ட்டனின் கொள்கை : அண்மையில் தர்ஸ்ட்டன் என்பார் g கூறினைப்பற்றி ஒரு புதிய கருத்தினை வெளியிட்டுள்ளார். அவர் கருத்துப்படி அறிதிறன் என்பது தனித்திறன்கள் அல்லது முதல் திறன்கள் என்பவற்றின் வரிசையால் அமைக்கப் பெற்றது; மக்களுக்கிடையே அத்திறன்கள் வேறுபடுகின்றன. ஒரு தனியாளின் திறன்கள் தாழ்ந்த நேர் ஒப்புத் தொடர்புடை யவை. இத்தொடர்பை g.போன்றதொரு பொது அறிதிறன் கூறினைக்கொண்டு விளக்கினும் அமையும். மூலக்கூறு பாகு பாடு' என்னும் புள்ளிக்கணித முறையினை மேற்கொண்டு இந்தத் திறன்களைத் தனித்தனியே பகுத்துக் காணலாம். இவ்வாறு தனியே அளப்பதற்கு எடுத்த முயற்சியில் இன்னும் சரியான வெற்றியில்லை. தர்ஸ்ட்டன் குழுவினர் ஏறக்குறைய 12 திறன்களைப் பகுத்துக் கொண்டுள்ளனர். 
  மேற்கண்டவாறு தொகுக்கப்பெற்ற முதல் திறமைகளின் வரிசையை அறிஞர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வதில்லை. இன்னும் சில ஆய்வாளர்கள் இப்பன்னிரெண்டு திறன்களுடன் வேறு சில திறன்களைக் கூட்டியும் குறைத்தும் கூறுவர். எனினும், அறிஞர் பலரும் இம்மூலக்கூறு பாகுபாட்டால் அறிதிறன் மூலங்களைக் காண முயல்கின்றனர் என்பது வெளிப்படை. இம்முயற்சி இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளது. போதிய அளவு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பெறவில்லை.

17. ...g65-opajáQarsiisos-Two-factor theory. ... 18. §ffeivil-or-Thurstone.

19. epool umgarg-Factor analysis,