பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் 31 t

கையாளுகின்றோம். வகுப்பில் மாணாக்கர்கள் பெறும் மதிப் பெண்களைப் பதிவேட்டில் பதிந்து சராசரி மதிப்பெண்ணைக் கணக்கிடுகின்றோம். சராசரி என்பது ஒரு முக்கியமான புள்ளி அளவையாகும். இதன் பொருளை நாம் நன்கு அறிவோம். எடுத்துக்காட்டாக, ஆண்கள் பெண்களைவிட உயர்ந்தவாகளா என்பதைக் கண்டறியச் சில ஆண்களையும் சில பெண்களையும் ஒப்பிடாது ஆண்களின் சராசரி அளவையையும் பெண்களின் சராசரி அளவையையும் ஒப்பிடவேண்டும். இங்ஙனமே மூளையின் அளவிற்கும் அறிதிறனுக்கும், அறிதிறன் சோதனை களுக்கும் பள்ளித் தேர்வுகளுக்கும், அறிதிறன குறைவுக்கும் குற்றம் செய்வதற்கும் உள்ள தொடர்புகளை அறியப் பல சோதனைகளை மேற்கொண்டு அச்சோதனைகளில் கிடைக்கும் புள்ளி விவரங்களில் புள்ளிக்கணித முறைகளை மேற்கொண்டு கோவைப்படுத்தி ஒப்பிட்டுத் தொடர்பு கொள்ளலாம். தவறான சில அளவைகளை நீக்கி உண்மையான பொதுமையை அறியப் புள்ளி விவர முறைகள் பெரிதும் துணை செய்கின்றன.

மனத்தின் சிறப்பியல்புகளின் கோலங்கள்

அன்றாட உற்று நோக்கலாலும் உளவியில் சோதனை களாலும் தனியாட்களிடையே சூழ்நிலையாலும் குடிவழியாலும் ஏற்பட்ட வேற்றுமைகள் மிக அதிகமானவையென்றும், அவை அளத்தற்கு அரியவை என்றும் அறிகின்றோம். இத்தகைய வேற்றுமைச் சிக்கல்களின் காரணமாகவே உளவியல் அறிஞர் களும் பிறரும் இவற்றுள் சில மனத்தின் சிறப்பியல்புக் கோலங் களை" காண முயன்றனர். அஃதாவது மக்களுக்குள் ஒற்றுமை வேற்றுமைகள் எவ்வாறு அமைகின்றன என்பதைப் பகுத்து உணர வழி வகைகளை ஆய்ந்தனர். இங்கு அத்தகைய கோலங் களைப்பற்றிப் பொதுமக்கள் கருத்தும் புறவய அளவுகளும் என்ன கூறுகின்றன என்பதைக் காண்போம்.

வகைகள் என்னும் பண்டைய இரு மையக் கொள்கைகள்: பொதுமக்களிடையே இக்கொள்கை அதிகச் செல்வாக்குப் பெற்றுப் பரவியுள்ளது. இக்கொள்கைப்படி ஏதாவது ஒரு பண்டை அடிப்படையாகக் கொண்டு மக்களை இரண்டு தொகுதி களாகப் பிரிக்கலாம், உழைப்பவன் சோம்பேறி என்றும், அகமுகர் புறமுகர் என்றும் மக்களைப் பிரித்து இந்த இரண்டு கோடிகளுக்குமிடையே இடைநிலைகள் அமையாதனபோல் மக்கள் கருதுவர். இஃது உண்மையாக இருக்குமாயின், இக்

32. Gastra lh-Pattern.