பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/335

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

கல்வி உளவியல் கோட்பாடுகள்


மீறினால் தீங்கிழைத்தல் கூடும். சில முறைகளில் வகுப்பு நிலைமைகளை ஒரு விதமாகவும், விளையாட்டு நிலைமைகளை இன்னொரு விதமாகவும் அமைத்து இவ்விடர்ப்பாட்டினைக் களைய முயல்கின்றனர். ஒரே வயதுள்ள மாணாக்கர்கள் ஒன்றாகக் கற்கின்றனர். ஒரே உள்ளக்கிளர்ச்சி வயதுள்ள மாணாக்கர்கள் ஒன்றாக விளையாடுகின்றனர். ஆயினும், இம் முறையிலும் ஒரு பெருங்குறை உண்டு. கல்வி திறம்பட அமைய வேண்டுமாயின் வகுப்பறையிலேயே சமூக எழுச்சி, அறிவு அதுபவங்கள் ஒருங்கே அளிக்கப்பெறுதல் வேண்டும்.

இரண்டாம் முயற்சி: மேற்கூறிய குறைகளை நீக்கவே இம் முயற்சி மேற்கொள்ளப்பெற்றது. இம்முறையில் ஒரே வயதுள்ள மாணாக்கர்களை ஒன்றாக வகுப்பில் சேர்த்து அவரது அறிதிறன் வேற்றுமைகளுக்கேற்பப் பல்வகைப் பாட ஒழுங்குகளையும் செயல்களையும் அமைத்தனர். பாடம் சிறு சிறு பகுதிகளாகவோ திட்டங்களாகவோ அமைக்கப் பெறுகின்றது. ஒவ்வொரு மாணாக்கனும் தன் கவர்ச்சிக்கும் வேகத்திற்கும் ஏற்ப இவற்றை முடித்துக் கொள்ளலாம். திறமை மிக்கவர்கள் பாடத்துள் ஆழமாகச் சென்று அதிகமான திட்டங்களை நிறைவேற்றுகின்றனர். பிறர் அடிப்படைத் திறன்களையாவது கற்கின்றனர். திறமை மிக்கவர்கள் மெதுவாகக் கற்போருக்குத் துணை செய்கின்றனர். ஆசிரியரும் பலவகையில் இவர்கள் துணையைப் பெறுகின்றார்.

தற்காலக் கல்வி முறைகளாகிய டால்ட்டன் திட்டம், தன்னோக்க முயற்சி முறை ஆகியவற்றில் தனியாள் வேற்றுமைகளுக்கேற்றவாறு கற்கும் வாய்ப்புகள் அமைந்துள்ளன.