பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல்கலமும் உடல்கலவியலும் 3念铭

கேள்விப் புலன் சரிவரச் செயற்படாத பேர்வழிகளைச் செவிடர்கள் என்கின்றோம். அன்றாட வாழ்க்கைக்குச் செவிடு ஒரு பெருங்குறையாகும். மக்களோடுள்ள பேச்சுத் தொடர் பின்றி குருடர்களைக் காட்டிலும் செவிடர்களே அதிகமாக விலக்கப் பெற்றுள்ளனர். நெடுநாள் செவிடு காரணமாக இவர்கள் பேசும் ஆற்றலையும் இழக்கின்றனர். ஆனால் முற்றுச் செவிடர் மிகக் குறைந்த பேர்களே; ஒலியலைவுகளைப் பெருக்கு வதன்மூலம் குறைச் செவிடர்களைக் கேட்கச் செய்துவிடலாம். செவி மந்தமுள்ளவர்கள் இரு வகைப்படுவர். .

அரைச் செவிடு : சாதாரணமாக நாம் கேட்கும் மென் குரல்களைக் கேட்க இயலாமையை அரைச் செவிடு' என வழங்கு கின்றோம். இவர்கள் கேட்க வேண்டுமாயின் உரக்கப் பேச வேண்டும். பல செயல்களுக்கு இது பெருந்தடையானது. பெரும்பாலும் இஃது ஒரு தொழில்வாய் நோய் என்று கண்டறிந் துள்ளனர். அஃதாவது இது தொழிலிலுள்ள வேலை நிலை களால் அதிகம் உண்டாகின்றது. பொறிகளிலும் ஒலிமிக்க இடங்களிலும் தொழில் புரிபவர்கட்கு இவ்வகைச் செவிடு உண்டாகின்றது.

இசைச் செவிடு : இசையின் ஏழு சுரங்களுக்கும் வேற்றுமை காண இயலாதவர்களை இசைச் செவிடர் என வழங்குவர். இசைக் கருவிகளை மீட்டுவதும் இனிமையாகப் பாடுவதும் இவர்களுக்கு இயலாது. ஆயினும், அரிய இசை நுட்பங்களைக் காணும் எஃகுச் செவியைப் படைத்தோர் இசைத்துறையில் வல்லவராவர் என்பதும் உண்மையன்று. .

காது நோய்கள் : புறச்செவி, இடைச்செவி, உட்செவி ஆகிய மூன்று பகுதிகளிலும் நோய்கள் உண்டாகும். இவை காது நோய்கன் என வழங்கப் பெறும். இவை பற்றிய விவரங்களையும் சிறிது அறிவோம்.

புறச்செவி மடலில் உண்டாகும் சாதாரண நோய்கள் கரப்பான்", கட்டி' ஆகியவை. புறச்செவிக் குழலில் குறும்பித் தடை, கொப்புளம், எலும்பு வளர்ச்சி முதலிய நோய்கள் உண்டாகும்.

செவிக்குழலில் குறும்பி எனப்படும் அழுக்கு தக்கைபோல்: இறுகி அடைத்துக்கொண்டு காது சரியாகக் கேளாது. சோடியம்

6. &cogé Géo-Intensity of deafness. 7. Qaward; 3& Go-Tone deafness. 8. கரப்பான்.Eczema9. *u-lo-Boil.

10. தக்கை.oேrk.

க. உ. கோ.21