பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் கலமும் உடல்கலவியலும் 3፰፻

தோட்டவேலை, படம் பார்த்தல், நீந்துதல், பாடுதல், இசைக் கருவிகளை இயங்குதல், நாடகம், சிறுகதை எழுதுதல் போன்றவை நல்ல பொழுதுபோக்குச் செயல்களே. பொழுது போக்குச் செயல்களில்தான் சிறுவர்கள் மிகவும் மகிழ்ச் சியுகின்றனர்.

விருப்பச் செயல்கள் : பொழுதுபோக்கு, துணை நிலை வேலைகளாலும் கிடைக்கின்றது. இவ்வகைச் செயல்கள் விருப்பச் செயல்கள்' என வழங்கப் பெறுகின்றன. பெரும் பாலும் தனியாள் கொள்ளும் கவர்ச்சிக்கேற்பவே விருப்பச் செயல் மேற்கொள்ளப் பெறுகின்றது. விருப்பச் செயல் மனத்தைப் புதிய பாதையில் திருப்பி, சிறந்த பொழுது போக்கினைத் தருகின்றது. அது மனத்திற்கும் புத்துயிர் அளிக்கின்றது; மன உரத்தைத் தருகின்றது. மனத்தை விரிவடையச் செய்து வாழ்க்கையில் புதிய தொடர்புகளையும் உண்டாக்குகின்றது. பள்ளியில் விருப்பச் செயல்களைத் தேர்ந் தெடுத்து மாணாக்கர்கள் அவற்றில் ஈடுபடுவதற்குத் தக்க வாய்ப்புகளை நல்குதல் வேண்டும்.

பால்.கல்வி-கல்வியில் அதன் இடம்

மேல்நாடுகளில் பெரும்பாலான பெற்றோர், மருத்துவர், கல்வியதிகாரி போன்றவர்கள் சிறுவர்கட்குப் பால் அறிவு புகட்ட வேண்டுமென்றும், அங்ங்ணம் புகட்டாவிடில் வேறு சிறுவர்களிட மிருந்தும் மட்டரகமான வெளியீடுகளிலிருந்தும் தவறான செய்திகளை அவர்கள் ஏற்க நேரிடும் என்றும் கருதுகின்றனர். ஆனால், இக்கல்வி எப்பொழுது, எவ்வளவு, எப்படி, யாரால் கொடுக்கவேண்டும் என்பது பற்றியே கருத்து வேறுபாடு உண்டு. பால்-கல்வி" புகட்ட வேண்டியதன் இன்றியமையாமையைப் பலர் மறுப்பதில்லை.

பால்.கல்விபற்றிய பிரச்சினை ஆசிரியரின் வேலையின் டையே நிகழும் ஒரு பிரச்சினையாகும். எனினும், அஃது அவ்வளவு முக்கியமன்று என அலட்சியப்படுத்திவிடக் கூடியதொன்றன்று. பொதுவாக ஏனைய கல்விபோல் குழுநிலையில் வெளிப்படை யாகப் பால்.கல்வியைப் புகட்டுதல் விரும்பத்தக்கதன்று என்பது உண்மையே. எனினும், சிறுவர்கள் பாலைப் பற்றிய அறிவு அவசியம் பெறவேண்டும் என்பதை அனைவருமே உணர் கின்றனர்.

يومه -مسمع مسسسسسسس....-.-----.-.......س..............

غة تم

53. விருப்பச் செயல்கள் Hobbies. 54. Liré-såså-Sex-education. க.உ.கோ.22 ... - -