பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

கல்வி உளவியல் கோட்பாடுகள்



புகட்டுவதற்குப் பொறுப்பாளர்: சிறுவர்கள் பால் பற்றிய பல வினாக்களை விடுக்கும்பொழுது உள்ளக்கிளர்ச்சிகளை எழுப்பாது ஆண்-பெண் உறவு பற்றிய அறிவு ஓரளவு அளிக்கப் பெறல் வேண்டும். குழந்தைப் பருவத்திலேயே (5 வயதில்) சிறுவர்கள், குழந்தைகள் எங்கிருந்து வருகின்றனர்? என்று வினவுவதை நாம் பார்க்காமல் இல்லை. தவிட்டுக்கு வாங் கினது, மருத்துவர் பையினின்று வெளிவந்தது என்பனபோன்ற பொய்யான கதைகளைக் கூறுவதால் நம்மிடமுள்ள நம்பிக்கை போய்விடும். பெற்றோரே குழந்தை தாயின் வயிற்றில் வளர்ந்தது என்று வெளிப்படையாகக் கூறிவிடுதல் சிறந்தது. குழந்தை பிறப்பதில் தந்தையின் பங்கினைப்பற்றி ஒன்பது அல்லது பத்து வயதுவரை சாதாரணமாக வினவப் பெறவ தில்லை; ஆனால், அவர்கள் வினவினால், அதையும் ஒளிவுமறை வின்றிக் கூறிவிடுதல் சிறந்தது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்,

மேற்கூறிய தகவலைத் தருவதற்குப் பெற்றோர்களே மிகவும் தகுதியுடையவர்கள்; பெற்றோர்களைக் கலக்காது ஆசிரியர்கள் பால்.கல்வியைப் புகட்டுதல் கூடாது. நம் நாட் டைப் பொறுத்தமட்டிலும் எல்லாப் பெற்றோர்களும் இதனைத் தருவதற்குத் தகுதியுடையவர்களல்லர் என்று சொல்லத் தேவையில்லை. - . . .

புகட்டும் முறை: பால்-வளர்ச்சியில் உடல் மாற்றங்களும் உள்ளக்கிளர்ச்சிபற்றிய மாற்றங்களும் படிப்படியாக நிகழ்வ தால், பால்-கல்வியும் படிப்படியாகவே தரப்பெறுதல்வேண்டும். குழந்தைகள் விடுக்கும் வினாக்களுக்கு முடி மறைக்காமல் வெளிப்படையாக விடை தருதல் வேண்டும் என மேலே கூறி னோம். அந்த வயதில் அதற்கு மேல் அவர் வினவார்.

உயிரியல் பாடங்களிலும், தாவர இயல் பாடங்களிலும் இதற்குத் தக்க வாய்ப்புகள் நேரிடுகின்றன. அவற்றின் இனப் பெருக்கம் பற்றிய தகவல்களை உரைக்கும்பொழுது பால். கல்வியும் கூடவே புகட்டப் பெறுகின்றது. மேல்நாடுகளில் பாலுணர்வுத் தகவல்கள் அடங்கிய சிறு நூல்களைப் படிக்கச் செய்தும், பிறகு மாணாக்கர்களுடன் தனித்தனியாக உரை பாடியும் இக்கல்வி புகட்டப்பெறுகின்றது. சில பள்ளிகளில் செல்லப் பிராணிகளை வளர்த்து அவை கலவி புரிவதையும், சூல் கொள்வதையும் காண வாய்ப்பு தருகின்றனர். இம் முறை யில் தரப்பெறும் பால்.அறிவு சிறுவர்களின் மனத்தில் இயல் பாகப் படிந்துவிடுகின்றது. இதனால் சிறுவர்களும் சிறுமியரும் குமரப் பருவத்தை எய்தும்பொழுது திடீரென அவர்களின்