பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வி உளவியலின் இயல்பும் அளவும்

17


அவர் கண்கள் சிவக்கின்றன; பற்கள் நற நறவென்கின்றன; கை மூட்டுகள் நெம்புகின்றன; சுவாசித்தலும் குருதியோட்டமும் பாதிக்கப்பெறுகின்றன. இம் மாறுபாடுகளால் அவர் சினங் கொண்டார் என்று எளிதில் ஊகிக்கலாம். அங்ங்னமே, ஒருவர் அவருடைய பொட்டுநரம்புகள் அசைவதைக் கண்டு அவர் ஆழ்ந்து சிந்திக்கின்றார் என்று அதுமானிக்கலாம். இப் புறக்காட்சி முறையால் பல உண்மைகள் கண்டறியப்பெற்றுள்ளன. இம் முறையிலும் இடர்ப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. நம்முடைய விருப்பு வெறுப்புகள் இதிலும் கலக்கின்றன. சிலர் இனங் கொண்டிருந்தாலும் புன்னகை காட்டுவர்; பிறர் துன்புறுவதில் உவகை கொள்ளினும், விசன மடைந்தவர் போல் நடிப்பர். ஆகவே, புறக்காட்சி முறையும் குறையுடையதே.

சாதாரண உற்று நோக்கல் வேறு, அறிவியல் உற்று நோக்கல் வேறு. ஒரு தாய் தன் குழந்தை விளையாடுவதையும், அழுவதையும், பிற குழந்தைகளுடன் கலாம் விளைப்பதையும், உறவாடு வதையும் காண்கின்றாள். இது கட்டுப்பாட்டிற் குட்படாத உற்றுநோக்கல். ஆனால், வகுப்பில் மாணாக்கர்கள் மனப் பாடம் செய்யும் முறைகள் பற்றிச் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, அவர்களின் தேர்ச்சி வேற்றுமைகளைக் கவனித்தல் கட்டுப்பாட்டிற் குட்பட்ட உற்று நோக்கல்.

பள்ளி மாணாக்கர்களைக் குறிப்பிட்ட காலங்களில் கவனித்து, அவர்கள் செயல்களை ஒழுங்காக எழுதிவைத்து அவர்களுடைய புனைவுத்திறன், உள்ளுணர்வு’, தலைமைப் பண்பு, பொறுப்பு இவை போன்ற குணங்களை அறுதியிடலாம். பல குடிமைப் பண்புகளையும் இம்முறையில் கவனித்து அறியலாம். -

பதிவேடுகள் : சில பதிவேடுகளிலிேருந்தும் உளவியல் ஆராய்ச்சி முறைகள் மேற்கொள்ளப் பெறுகின்றன. அவற்றுள் மூன்றினை மட்டிலும் ஈண்டு விளக்குவோம்.

(i) நிகழ்ச்சி முறை : ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மெய்ப்பிப்பதற்காகச் சில திட்டமான வரையறுத்த நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டுவதைப் பொறுத்து இம்முறை அமைகின்றது. விலங்குகளிடத்தும் சிறுவர்களிடத்தும் இம்முறை


47. உள்ளுணர்வு -Intution.
48. பதிவேடுகள்-Records.
49. நிகழ்ச்சி-Anecdotal method.
க. அ. கோ.2