பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/361

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

கல்வி உளவியல் கோட்பாடுகள்


காரணமாகவே பித்தர்கள் பிறரைப் பித்தர்கள் என்றும், தாம் சாதாரணமானவர்கள் என்றும் கருதுகின்றனர். இயல்பானவை இன்னவை என்பதுபற்றிய அளவுகோல் அகவயமானது[1] . அது குழுவிற்குக் குழு, நாட்டிற்கு நாடு, காலத்திற்குக் காலம் மாறுபடுகின்றது. கல்லிவர் என்பான் குள்ளர்களின் நாட்டிையடைந்த போது அவர்கள் அவனை ஒர் அரக்கன் என்று கருதினர்; ஆனால், அவன் அரக்கர்கள் நடுவே காணப்பட்ட பொழுது, அவ்வரக்கர்கள் அவனைக் குள்ளனாகவே கருதினர். அவனுடைய அளவு ஒன்றுதான் என்பதையும், அளவுகோல்கள் தாம் வேறானவை என்பதையும் நாம் அறிவோம். வேறு சில எடுத்துக்காட்டுகள் தருவோம். குதின்ரகளையும் தவளை களையும் உண்ணும் ஃபிரெஞ்சுக்காரர்களின் நடத்தை, இறந்த காட்டுப் பன்றிகளையும் உயிருள்ள கிளிஞ்சல்களையும் உண்ணு வதற்கு விரும்பும் இயல்பான அமெரிக்கனுக்கு அதிர்ச்சியைத் தருகின்றது. சூனியத்தில் நம்பிக்கையுள்ள கடுந்துாய்மைச் சமயக் குருமார்கள்[2] சூனியக்காரர்கள் என ஐயப்பட்டவர்களின் உயிர்களை வாங்கினர்; அவர்கள் நடத்தை அக்காலத்தில் இயல்பானதாகக் கருதப்பெற்றது. ஆனால், அவர்களின் வழித் தோன்றல்களாகிய குருமார்கள் சூனியத்தில் நம்பிக்கை கொண்டாலும், ஐயப்படுபவர்களின் உயிர்களை வாங்க நினைத்தாலும் அவர்களின் இந் நடத்தை இன்று பித்தர்களின் புகலிடத்திற்கு அனுப்புவதற்குப் போதுமானதாகும்.

மேலே காட்டப்பெற்ற எடுத்துக்காட்டுகள் யாவும் அகவய ம்ானவை; சொந்த விருப்பு வெறுப்புகளையோ, ஒரு குழுவின் விருப்பு வெறுப்புகளையோ அடிப்படையாகக் கொண்டவை. அப்படிப்பார்த்தால், அறிவியல் துறை, அரசியல் துறை, சமயத் துறிையில் தோன்றி உயர். குறிக்கோளுக்காக உயிர்களைத் துறந்த பெரியோர்களின் நடத்தைகளை இயல்பு பிறழ்ந்தவையாகக் கருத நேரிடும். ஆனால், இங்கு உளவியலார் கருதும் இயல்பு பிறழ்ந்த நடத்தைகளைப் பற்றியே நாம் ஆராயப் போகின்றோம், முதலில் குழந்தைகளிடம் வீடு, பள்ளிச் சூழல்களால் அவ்வித நடத்தைகள் தோன்றுவதற்குரிய காரணங்களை ஆராய்வோம்.

குடும்ப நிலையிலுள்ள ஏதுக்கள்

சிறுவுன் கிட்டத்தட்ட ஆறு யாண்டுகள் வரையிலும் குடும்பச் சூழலிலேயே வளர்ந்து வருகின்றான். குடும்பத்தில்தான் சிறுவன்


  1. 4. அகவயமானது-Subjective.
  2. 5. கடுந்துாய்மைச் சமயக் குருமார்கள்-Puritan Fathers.