பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல்பு பிறழ்ந்த நடத்தை

359


நம்பிக்கையும் கொண்ட தொண்டர்களால்தான் இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும்.

இரண்டாவதாகச் செய்யவேண்டுவது தம்மிடத்திலும் பிறரிடத்திலும் நம்பிக்கை பெற்று வாழுமாறு இச்சிறுவர்களைப் பழக்கவேண்டும். அவர்களுடைய உண்மையான ஆற்றல்களுக்கும் இயல்பூக்கங்களுக்கும் ஏற்றவாறு கைவேலைகளில் தேர்ச்சி பெறச் செய்யலாம். அதனால் தன்னம்பிக்கை ஏற்பட்டு சமூக எதிர்ப்புக் குறையும்; கூட்டுறவும் ஏற்படும். தம்மால் நற்செயல் புரிய இயலும் என்னும் பண்பும் (தற்சாதிப்பு) அவர்களிடம் வளரும். இதற்கு அவர்கள் முழு தம்பிக்கை வைக்கும் ஒரு முதிர்ந்தோரின் துணை மிகவும் இன்றியமையாதது. அவரிடம் வலுவான அன்பு ஏற்பட்டால்தான் இவர்களுடைய மனப்பான்மையிலும் மாற்றம் நிகழும், அவரைப் போல் தாங்கள் தங்ளை மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் தோன்றும். அன்பு, பாதுகாப்பு, உடைமை எண்ணம், வெற்றி மனப்பான்மை ஆகியவையும் இவர்களிடம் நாளடைவில் ஏற்பட்டுத் திருந்துவர்.

மூன்றாவதாகத் தம்முடைய நடத்தையினையும் அந்த நடத்தையைத் துரண்டும் ஊக்க நிலைபற்றியும் உள்ளுணர்வு பெறுமாறு செய்தல் வேண்டும், அப்பொழுது தன்னடக்கம் பொலிந்து வரும். பெரும்பாலும் அறிவுக்குறைவுள்ள சிறுவர்கள் திச்செயல்களில் இறங்குவதற்குக் காரணம் அவர்கள் அறநெறி பற்றிய கருத்துகளை உணர முடியாததே. பெரும்பாலான சிறுவர்களிடம் 12 வயது முடியும் வரையில் அக்கருத்துகள் அவர்கள் மனத்தில் படிவதில்லை என்று பினே[1] யின் அறிதிறன் சோதனைகளால்[2] அறிகின்றோம்.

நான்காவதாகச் சிறு பொறுப்புகளை அவர்கட்கு அளித்தும் திருத்தலாம். பெரும்பாலான நெறிபிறழ்ந்த சிறுவர்கள் அதிகாரத்தை அடையவேண்டும் என்ற துடிப்புடன் காணப் பெறுவர். ஆசிரியர் பள்ளி வாழ்க்கையில் விளையாட்டுக் குழுத் தலைவர் போன்ற பதவிகளைத் தந்து அவர்கள் அவாவினைத் தீர்க்கலாம். இதனால் அவர்கள் தம் குடும்பத்திற்குத் தலைவர்களாகவும் சமுதாயத் தொண்டர்களாகவும் இனிதே வாழ வழி அமையும்.

ஐந்தாவதாகக் குழந்தையின் குடும்ப வாழ்க்கையைப்பற்றிய தகவல்களை அறிதல் வேண்டும். இதை ஆசிரியர் திறமையுடன்


  1. Binet.
  2. அறிதிறன் சோதனை-Intelligence test.