பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/410

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒழுக்க வளர்ச்சி

391

-கின்றான். தன்னைப்பற்றிய திட்டமான கருத்து அவனிடம் அமைகின்றது; தான் 'இப்படிப்பட்ட ஒழுக்கமுடையவன்' என்றும் கருதுகின்றான். தன்னுடைய தோழர்கள் தன்னை நடத்தும் முறை தன் நிலையை அறிவதற்குப் பயன்படுவ தோடன்றி, தான் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறியவும் பயன்படுகின்றது. இது கல்வித்துறைக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைகின்றது. சிறுவர்கள் தங்களைப்பற்றிச் சிறந்த எண்ணங்களைக் கொள்ளும்படி பெற்றோர்களும் ஆசிரியர்களும் வழிவகை செய்யவேண்டும். இஃது அவர்களின் முதற்கடமையே யன்றி முதலாய கடமையுமாகும். தம்மைப் பிறர் நேர்மை யுடையவர்கள், உண்மையுள்ளவர்கள், நம்பிக்கை வைக்கத் தக்கவர்கள், உழைப்பாளிகள் என்று கருதினால் அவர்களும் அவ்வருங் குணங்களுக்குப் பாத்திரர்களாவர்; தம்மை அப்பண்பு டையவர்களாகவே கருதி அங்ஙனமே நடந்துகொள்வர். அவர்களின் செயல்களில் ஏதேனும் குறை இருப்பதைச் சுட்டியுரைத் தால் அவர்கள் நாணமுற்று அதனை நீக்க முயலுவர். அங்கான மின்றிப் பிறர் தம்மைத் தீயவர்கள், பயனற்றவர்கள், நம்பிக்கை யற்றவர்கள், சோம்பர்கள் எனக் கருதினால், அவர்களும் தம் கொடுமையை உறுதி செய்துகொள்வர்; அத்தகைய செயல்களில் செருக்கும் கொள்வர். எனவே, சரியான மதிப்பைச் சிறுவர்களிடம் அமையச் செய்வது கல்வியாளர்களின் கடமையாகும். "நீ அங்ங்ணம் செய்வாய் என்று நான் கருதவில்லை, நீ புரியும் செயலா அது?", "ஒருகணித ஆசிரியன் மகனா இந்த மதிப்பெண் பெறுவது?" என்பன போன்ற துரண்டுரைகள் சிறுவர்களின் தன்மதிப்பைச் சிறந்த முறையில் வளர்க்கத் துணைசெய்யும்; இத்தகைய புகழுரைகள் அவர்களின் செயல்கட்கு ஒருமைப்பாடுதரும்; உயர்ந்த சமூகத் தில் சிறந்த உறுப்பினர்களாகச் செய்யும். அவை அவர்களுடைய தன் மதிப்பு, தன்மானம், ஒழுக்கம் ஆகியவற்றை வளர்க்கும். முதலில் அவர்கள் குறிகோளையொட்டி வாழ முயலுவர்: முதலில் 'குறிக்கோள்-தான்' (Ideal.self) என்பதற்கு மதிப்பு தந்து பிறகு அது பிறப்பிக்கும் ஆணைகளுக்கும் கீழ்ப்படிந்து நடப்பர். இங்ங்ணம் தன் மதிப்புப் பற்று வளர்ச்சியுற்று வாழ்க்கையில் ஒருமைப்பாடும் நிலைப்புத் தன்மையும் அமையக் காரணமாகின்றது. இத்தகைய தன்-மதிப்பை வளர்க்கும் பொருட்டே தற்காலத்தில் இளங்குற்றவாளிகள்15 சிறைச் சாலைக்கு அனுப்பப்பெறாமல் திருத்தச் சாலைக்கு அனுப்பப் பெறுகின்றனர்.


15 இளங்குற்றவாளிகள்-Juvenile offenders.