பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/411

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

392

கல்வி உளவியல் கோட்பாடுகள்



ஒருவருடைய விருப்பு வெறுப்புகள் நிறைவேறினால் களிப்பு16 உண்டாகின்றது; அவை நிறைவேறாவிடின் அருவருப்பு17க் கொள்ளச் செய்கின்றது. சில சமயம் இவ்வரு வருப்பு வாழ்க்கையிலேயே வெறுப்புத் தட்டும் அளவுக்குக்கூட வளர்ந்துவிடுகின்றது. முதலில் தன்-மதிப்புப் பற்று குடும்பத்தை யொட்டி அமைகின்றது; நம்முடைய விருப்பு முழுவதும் இந்த வட்டத்திலேயே சுழலுவதால், அங்கு நாம் களிப்படை கின்றோம்; அல்லது ஊக்கமிழந்து நிற்கின்றோம். நாளடைவில் இவ்வட்டம் விரிவடைகின்றது; தன்னையொத்தவர்களிடையே பள்ளிச் சிறுவன் தன்னெடுப்பும் தன்னொடுக்கமும்18 கொள்கின்றான். இங்கனம் வாழ்க்கை முழுவதும் ஒப்பாரின்19 ஏற்பையே (மதிப்பு) அவாவி நிற்கின்றோம்.

"அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டு
மிகைமக்க ளான்மதிக்கற் பால"20

என்ற நாலடியாரை நோக்குக. இங்ங்னமே, ஒரு நூலாசிரியனும் தரங்குறைந்தவர்களின் புகழுரைகளையோ இகழுரைகளையோ பொருட்படுத்துவதில்லை.

படிப்படியாக நம்முடைய நடத்தையின் ஏற்பிற்கோ, அன்றி ஏற்பின்மைக்கோ நாம் இந்தக் குறிக்கோள். தானையே நோக்குகின்றோம். முன்னர்க் குறிப்பிட்ட அறப்பற்றுகள் வளர்ச்சியுற்றவுடன், தனியாள் குறிக்கோள் சமூகத்தின் உறுப்பினனாகி விடுகின்றான். நம்முடைய "தான்" உறுப்பாக இலங்கும் அந்தச் சமூகத்திற்கே நாம் அதிக மதிப்பினைத் தருகின்றோம். இந்நிலை அடைந்ததும், நாம் தன்-வளர்ச்சியின்21 எல்லைகளையே நெருங்கி விடுகின்றோம். இப்பொழுது எல்லா இயல்பூக்கங்களும் கட்டுப்பாட்டினுள் அடங்கி குறிக்கோள். தானால் நெறிப்படுத்தப்பெறுகின்றன. இதைத்தான் நாம் தன்-அடக்கம்22 அல்லது தன் கட்டுப்பாடு என்று வழங்குகின்றோம். இத்தகைய தன்-அடக்கம் நீண்ட நாள் பயிற்சிக்குப் பிறகே எய்தக்கூடியது; இந்தப் பயிற்சியின் பொழுது குறிக்கோள்.தான் வளர்ச்சி பெற்றுத் துலக்க-


16.களிப்பு-Elation.
17.அருவருப்பு-Disgust
18. தன்னொடுக்கம்-Self-abasement.
19. ஒப்பார்-Peers.
20. நாலடி-163.
21. தன்-வளர்ச்சி-Self-development.
22. தன்-அடக்கம்-Self-control.