பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்க வளர்ச்சி

393



முறுகின்றது. பெரும்பாலோரிடம் இந்நிலை அவாவப்பெறு கின்றது; ஆனால், அதை எய்துதல் அரிதாகவேயுள்ளது.

ஒழுக்கமும் மன உறுதியும்' இயல்பூக்கச் செயல் முக்கூறுகளுடன் விளங்குகின்றது. பொருள்களை அறிகின்றோம்; இது அறிவு நிலை. பொருள் களை அறியும்பொழுது நாம் வேண்டிய பொருளாயின் களிக்கின்றோம்; வேண்டாப் பொருளாயின் வெறுக்கின்றோம். இவ்வாறு விருப்பும் வெறுப்பும் கலந்தது உணர்ச்சி நிலை.: நாம் வேண்டும் பொருளாயின் அதனை அடைய நம் மனம் பதை பதைக்கின்றது; துடிதுடிக்கின்றது. இந்நிலை இயற்றி கிலை" என வழங்கப்பெறும். இவை தனித்தனியே இயங்கா; அவை ஆளுமையின்மன வன்மைகளும் அல்ல. ஒரு மனிதன் எண்ணும்பொழுது, உணரும்பொழுது அல்லது செயலாற்றும் பொழுதுதான் ஆளுமை' முழுதும் செயற்படுகின்றது. எனவே, மன உறுதி என்பது மனவன்மை? அன்று என்பதாகின்றது. அது ஆளுமையின் ஒரு குறிப்பிட்ட செயலைக் குறிக்கின்றது. ஒரு மனிதன் அநுபவங்களையும் உள்ளுணர்வையும்?" தழுவி அதன் படி நடத்தலே மன உறுதியாகும். மன உறுதியைத்தான் திருக்குறள் மனத்திண்மை எனக் குறிக்கின்றது. ஒருவருடைய தோன் முழுவதும் தீர்மானம் செய்து அதன்படி செயலாற்று கின்றது. எனவே, மன உறுதி என்பது ஆளுமையின் செயற்படு நிலையாகும். மாக்கேல் என்ற உளவியல் அறிஞர் செயற்படும் ஒழுக்கமே மன உறுதி என்று கூறுவர். -

பற்றுகள் எங்ங்னம் உண்டாகின்றன என்று மேலே கண்டோ மல்லவா? பற்றுகளில் நல்லனவும் உண்டு; தீயனவும் உண்டு. இப்பற்றுகள் மிக வன்மையாக இருப்பின் தனியாளின் வாழ்க்கை யில் நிரந்தரமான இயல்புகளாகப் படிந்து விடுகின்றன. சில சமயம் பற்றுகளிடையே போராட்டம் நிகழ்தலும் உண்டு. சில எடுத்துக்காட்டுகள் இதனைத் தெளிவாக்கும். நாளை நடை பெற இருக்கும் தேர்வுக்குப் படிப்பதா, அல்லது இன்றிரவு நடை

23, Logor 2-06-Will24. & slalogu-Cognition. 25. 2 Gorff #8F Įstao 60-Affection. 26. Quiñologna). Conation. 27, -ojo up-Personality. 28. udsar 6u6ārsolo-Faculty. 29. உள்ளுணர்வு.Insight. 30. (3Lırror m"L*.Lub•Conflict•