பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/419

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

கல்வி உளவியல் கோட்பாடுகள்


வாழ்க்கையில் பள்ளியில் கழியும் நேரமே அதிகம் என்பதை எவரும் அறிவர். எனவே, வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அவன் பள்ளியில் பெறும் கல்வியைப் பாதிக்கச் செய்கின்றன. ஆகவே, பள்ளி இயற்ற விரும்பும் வினைகளனைத்தையும் தானாகவே சாதித்துவிட முடியாது. ஒழுக்கம், ஆளுமை, குடிமை ஆகிய பண்புகள் மாணாக்கர்களிடம் வளர்ப்பதற்கும், மாணாக்கர்களிடம் விரும்பத் தக்க பழக்கங்களையும் மனப் பான்மைகளையும் உண்டாக்குவதற்கும், பெற்றோரின் உட்கருத்தை யறிந்து குழந்தைகளின் வளர்ச்சியில் அவர்களின் துணையைப் பெறுவதற்கும் பள்ளி தன் வேலையை வீட்டு வேலையுடன் இயைபுபடுத்த வேண்டும்; இரண்டும் இணைந்து நெருங்கிப் பிணைந்து போக வழிவகைகளை வகுக்க வேண்டும்.

பெற்றோரின் உட்கருத்தும் மாணாக்கர்களின் செயலைப் புரிந்து கொள்ள விரும்பும் ஆசிரியருக்குப் பெரிதும் பயன்படும். குழந்தையின் உடல்நிலை, குழந்தை வாழும் இல்லத்தின், சூழ்நிலை, அங்குள்ள கவர்ச்சிகள், சுற்றுப்புறச் சூழ்நிலைகள் வீட்டில் அவனுடைய நடத்தை முதலியவற்றை ஆசிரியர் நன்கு அறிந்து கொண்டால்தான் ஆசிரியரும் தம் தொழிலைத் திறம் படச் செய்ய முடியும். ஆசிரியர் அடிக்கடி குழந்தைகளின் இல்லங்களைப் பார்வையிடுதல், பெற்றோருடன் உள்ளங் கலந்து இன்னுரை பாடுதல் போன்றவற்றாலும், பெற்றோ ருடன் இணைந்து இயற்றும் செயல்கள் மூலமும் மாணாக்கர்கள் பற்றிய பல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டும், பெற்றோர்கள் தம் சொந்தக் குழந்தையைப்பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ளும் அறிவுடையவராக இருத்தல் வேண்டும். உடல் வளர்ச்சியில் தாம் காட்டும் அக்கறையைப் போல் உள்ள வளர்ச்சியிலும் தமக்குப் பங்கு உண்டு என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்தல் வேண்டும். உணர முடியாத பெற்றோர்களுடன் ஆசிரியர்கள் உரையாடிக் கலந்து பேசி, அவர்கள் உணரும்படிச் செய்யலாம்.

மாணாக்கர்களின் வளர்ச்சியில் பள்ளியும் ஆசிரியரும் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தையும் பெற்றோர்கள் நன்கு அறிதல் வேண்டும். பெற்றோர்.ஆசிரியர் கூட்டங்கன், தனி உரையாடல்கள், அறிக்கைகள், வீடுகளுக்கு அனுப்பும் குறிப்புகள், பழைய மாணாக்கர்க் கழகக் கூட்டங்கள், தேர்ச்சி அறிக்கைகள் முதலியவை அனைத்தும் இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளப்பெறும் வாயில்கள் ஆகும். இவை ஒவ்வொன்றையும் பெற்றோர். புரிந்து கொள்ள வேண்டும். புரியாத பெற்றோர்கட்குப் புரிய வைக்க வேண்டியது