பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/420

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒழுக்க வளர்ச்சி

401


ஆசிரியர்களின் கடமை. குழந்தைகளின் வளர்ச்சி சிறந்த முறையில் பாதுகாக்கப்பெற வேண்டு மென்பதற்காகவே சமூகம் ஆசிரியர்கட்குத் தனிப் பயிற்சி அளித்து வருகின்றது என்பதை ஆசிரியர்கள் உணர்தல் வேண்டும்.

நிலைத்த பயனை பெற வேண்டுமாயின், பள்ளி தொடங்கும் நல்வினைகள் அனைத்தும் வீட்டிலும் தொடர்ந்து நடைபெற வசதிகள் அளித்தல் வேண்டும். உடல்நிலை, பல முதலிய வற்றைப் பற்றிய உடல்நல வழிகளுடன், நல்ல நூல்கள், பருவ இதழ்கள், விளையாட்டுச் சாமான்கள் முதலியவை வீட்டிலும் கிடைக்க வேண்டும். வீட்டுப் பொறுப்புகள், கடமைகள், பணத்தைக் கையாளுதல், காய்கறிச் சந்தை, மளிகைக்கடை முதலியவற்றிற்குச் சென்று வருதல் போன்ற பொறுப்புகளையும் சில சமயம் குழந்தைகட்கு அளித்தல் நற்பயன் விளைவிக்கும். இவை பள்ளி வேலைக்குப் பேருந்துணையாகவும் அமையும்.

குழந்தைகளை காலா காலத்தில் பள்ளிக்கு அனுப்புவது, பள்ளியில் தரப்பெறும் வீட்டு.வேலையை (Home work)ச் சரிவரச் செய்யச் சொல்லுவது, பள்ளி ஒழுங்கு முறைகளை கவனிக்கச் செய்வது போன்றவற்றில் பெற்றோர்கள் ஆசிரியருக்குப் பெருந்துணையாக இருத்தல் வேண்டும். குழந்தை வளருங்கால் அதன் ஒழுக்கத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சிகள் வீட்டிலும் எழலாம்; பள்ளியிலும் எழலாம். வீட்டில் நடை பெறுபவை பள்ளி நடத்தையைப் பாதிக்கும்; பள்ளியில் நடை பெறுபவை வீட்டு நடத்தையைத் தாக்கலாம். பெற்றோர். ஆசிரியர் கூட்டுறவு, இத்தகையவற்றைப் புரிந்து கொள்ள வாய்ப்புகள் நல்கும்.