பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 கல்வி உளவியல் கோட்பாடுக்ள்

பல்விடையிற் பொறுக்குச் சோதனைகள்": முற்கூறிய வற்றை விட இவை சற்று அருமையும் வளர்ச்சியும் உடையவை. இவற்றுள் ஒரு பொருள்பற்றிய பல தொடா மொழிகளில் எது சரி என்று மாணாக்கர்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும் மூன்றிலிருந்து ஐந்துவரைத் தொடர் மொழிகள் கொடுக்கப்பெறும்,

(எ-டு) கீழ்க்காணும் வினாக்களில் ஒவ்வொன்றின்கீழும் ஐந்து விடைகள் கொடுக்கப்பெற்றுள்ளன. பொருத்தமான வற்றின் எண்ணைமட்டிலும் வலப்புறத்திலுள்ள பகர வளை வுக்குள் எடுத்தெழுதுக.

1. நளவெண்பாவை இயற்றிய புலவர்:

(அ) ஒட்டக்கூத்தர் (ஆ) கம்பன் (இ) புகழேந்தி (ஈ) நக்கீரர் (உ) செயங் கொண்டார் [ ] 2, காற்றில் ஒலியின் வேகம்:

(அ) வினாடி ஒன்றுக்கு 10 அடி. (ஆ) வினாடி ஒன்றுக்கு 550 அடி. (இ) ஐந்து வினாடிக்கு ஒரு மைல் (ஈ) மணி ஒன்று 60 மைல் (உ) மணித்துளி ஒன்றுக்கு 20 மைல், I j 3, பல்லவ மன்னர்களுள் தலைசிறந்தவன்:

(அ) சிம்மவிஷ்ணு (ஆ) மகேந்திரவர்மன் (இ) நரசிம்மவர்மன் (ஈ) இராஜசிம்ஹன்

... (ഉ) விஷ்ணுகோபன் - - so 1. 4. ஒரு செங்கோண முக்கோணத்தில் பெரிய கோணத்தின் மதிப்பு: - " . - -

(அ) 120 (ஆ) 110 (இ) 90 (ஈ) 80 (உ) 100 - - ‘. . .

நிரப்பும் சோதனைகள்!! : கோடிட்ட இடங்களில் ஏற்ற சொற்களை அமைத்துத் தொடர்மொழியை முடித்துக்

10. பல்விடையிற் பொறுக்குச்சோதனைகள் - Multiple

choice tests. - - II. Histol-sih 347.5&nsorãsir-Completion tests.