பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்பீடும் சோதனையும்

407


காட்டல். இவ்வகைச் சோதனைகள் கீழ்வகுப்பு மாணாக்கர் கட்கு மிகவும் ஏற்றவை. ஏற்ற சொல்லை எழுதுவதற்கு முன் ஒரு முறை தொடர்மொழியைப் படித்துப் பின் சொல்லை அமைத்துப் பின்னும் ஒரு முறை தொடர்மொழியைப் படித்துத் தொடர் மொழி சரியான பொருளைத் தருகின்றதா என்று பார்க்கும்படி அறவுறுத்த வேண்டும்,

1. முதல்வேற்றுமை — எனப்

படும். . . . . . .

2. காங்கிரஸ் மகாசபை — யாண்டில் ஏற்

பட்டது. : ". . . . . - -

3. வயிற்றில் ஊறும் செரிமான நீரின் யெயர் - 4. அயோடின்

-ல் கரையும், இணைக்கும் சோதனைகள்: இரண்டு வரிசைகளாகத் தொடர் மொழிகளை உண்மையும் பொருத்தமும் முறையும் பிறழ அமைத்து அவற்றைப் பொருத்தும்படி செய்தல் இணைக்கும் சோதனைகளாகும். நிகழ்ச்சிகள், அவை நிகழ்ந்த யாண்டுகள்; போர்கள், அவற்றை நடத்திய சேனைத் தலை வர்கள்; புலவர்கள், அவர்கள் இயற்றிய நூல்கள்; பழமொழி கள், அவற்றின் கருத்துகள்; மரபுத்தொடர்கள், அவற்றின் பொருள்கள் போன்றவற்றை இவ்வாறு பொருத்தச் செய்யலாம். காரண காரியங்களையும் வரிசைப்படுத்தலாம். குறித்த பொருளறிவைத் தேற இது சிறந்த முறையாகும்,

(எ-டு) கீழ்க்கண்டவற்றில் அ' பிரிவிலுள்ளவற்றை ஆ" பிரிவிலுள்ளவற்றுடன் பொருத்திக் காட்டுக. பகர வளை விற்குள் விடையின் எண்ணை மட்டிலும் இட்டால் போது மானது. - - - -

அ-பிரிவு ஆபிரிவு அள்ளிக்கொட்டுதல் 1 (அ) பயனற்றது ஆறப்போடுதல் (ஆ) நஷ்டம் அடைதல் கையைக் கடித்தல் (இ) மிகச்சம்பாதித்தல் ஒரு காலில் நிற்றல் (ஈ) விடாப்பிடியாயிருத்தல் குரங்குப்பிடி (உ) காலந் தாழ்த்தல்

(ஊ) பொய்த் தோற்றம்

s

- இனச் சோதனைகள்: ஒர் இனம் அல்லது தொகுதியில் சேராத, அடங்காத சொற்களை அவ்வரிசையிலிருந்து அடித்து

12. இணைக்கும் சோதனைகள்-Matching tests. 13, Goré G&m & Goswassir-Classification tests,