பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

410

கல்வி உளவியல் கோட்பாடுகள்


குறிப்பிட்ட குழுவினருக்குக் கொடுக்கவேண்டும். இதே சோதனை மீண்டும் கொடுக்கப்படும் என்று முன்னறிவிப்பு இன்றியும், இந்த சோதனைப்பற்றிப் பேசவோ சிந்திக்கவோ வாய்ப்பு கொடாமலும் மீண்டும் ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு இதே சோதனையை வழங்கி இவ்விரண்டு சோதனைகளிலும் ஒவ்வொருவரும் அதிக வேற்றுமையின்றி மதிப்பெண்கள் பெற்றிருந்தால் சோதனை முரண்பாடின்மை யுடையது எனக் கூறலாம்.

மேற்கூறிய முறையால் மாணாக்கர்களின் அவ்வப்பொழு தைய மனநிலை வேற்றுமையினாலும், சோதனைகள் தக்கமுறை யில் ஆயத்தம் செய்யப் பெறாமையினாலும் ஏற்படக்கூடிய முரண்பாடுகளையும் மதிப்பிட முடியும். ஒரு முறை வகுப்பில் இலக்கணத் தேர்வு ஒன்று நடத்திய ஆசிரியர் வகுப்பில் மூவரே தேறியது கண்டு மூன்று நாட்கள் கழித்து அதே வினாத்தாளைக் கொண்டு நடத்திய தேர்வில் வேறொரு மூவர் தேறக் காண்கின்ற காட்சியை எந்தப் பள்ளியிலும் இன்று காணலாம். கணக்குத் தேர்வில் இந்த அநுபவத்தை அடிக்கடிக் காணலாம். இந்தத் தேர்வுகள் முன்னுக்குப்பின் முரணான முடிவுகளைத் தருபவை. நேற்று அறிவாளி இன்று முட்டாள் என்பது வியத்தகு முடிவன்றோ? ஒரு நல்ல தேர்வில் இம்முரண் படாமையைக் காண முடியாது. கட்டுரைத் தேர்வுகளின் முடிவுகள் முரண்படுபவை; தடவைக்குத் தடவை மாறுபடும் இயல்புடையவை. புதிய முறைத் தேர்வுகளின் முடிவுகள் ஒரளவு முரண்படாத் தன்மையைப் பெற்றுள்ளன. ஆனால், முரண்பாடுடைமை வேறொரு காரணத்தாலும் ஏற்படலாம். அஃதாவது, மதிப்பிடுபவர்கள் ஒருவருக்கொருவர் விடைகளின் தரத்தைப்பற்றி வேறுபடுதலாகும். மற்றும், ஒருவரே சோதித் தாலும் ஒரே விடைக்கு அவர் பல்வேறு சமயங்களில் பல்வேறு மதிப்பெண்கள் வழங்குகின்றார். இதை நீக்கும் வழியை அடுத்துக் காண்போம்.

புறவயம்[1] : ஒரு நல்ல சோதனையின் இன்னொரு சிறப்பியல்பு அதன் புறவயம் ஆகும். ஓர் ஆய்வின் விடையேடுகளைப் பலர் மதிப்பிட்டாலும் மதிப்பெண்கள் மாறாதிருக்கு மாயின், அச்சோதனை புறவயமுடையவை என்று சொல்லலாம். அஃதாவது, சோதனையைக் கையாளுவோர் கருத்து, மனநிலை ஒரு தலைச் சார்பு முதலியவற்றிற்கேற்றவாறு மாறாத முடிவு களைத் தரக்கூடிய சோதனையே புறவயத்தைக்கொண்ட சோதனையாகும். இன்று பள்ளித் தேர்வுகளால் காணும்


  1. 17. புறவயம் -Reliability.