பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

கல்வி உளவியல் கோட்பாடுகள்



புலன்கள் என்கின்றோம். புகுவாய்களைத் தாக்கும் விசைகள் உளவியலில்[1], வழங்கப்பெறுகின்றன. தூண்டல்களுக்கேற்பத் தனியாளிடம் நடைபெறும்[2] யைத்துலங்கல் என்ற வழங்குவர் உளவியலார்.

(ஆ) [3] இவை இயங்கும் கருவிகள். புகுவாய் வழியாகத் தாக்கலை அறியும்போது அதற்கேற்ப எதிரூன்றி நிற்கின்றோம். ஒளி, ஒலி, சூடு, சுவை, மணம், அமுக்கம், வலிபோன்ற தாக்கல்களுக்கு ஏற்பத் துலங்கும் உறுப்புகள்தாம் இயங்குவாய்கள். இயற்கைப் பரப்பானது நம்மைப் பல வகையாலும் தூண்டுகின்றது. அதற்குத்தக நாமும் இலங்குகின்றோம். இயங்குவாய்கள் யாவும் சுரப்பிகளும் தசைகளுமாகும். சில எடுத்துக்காட்டுகள் இவற்றைத் தெளிவாக்கும், ஒலிகேட்டுத் திடுக்கிட்டெழுகின்றோம்; பேரொளி கண்டு கூசிக் கண்ணை மூடுகின்றோம். ஒலி கேட்டலும், பேரொளி கண்ணில் படுவதும் துண்டல்கள் (ஊன்றல்கள்); திடுக்கிட்டெழுதலும் கண்ணை மூடுதலும் துலங்கல்கள் (எதிரூன்றல்கள்). கண்ணை மூடுதலும் திடுக்கிட்டெழுதலும் தசைகளின் செயல்களாம். இவை நாம் வேண்டும்போது இயங்கி வரும்[4] செயல்களாகும். குருதி, ஈரல்,[5], இரைப்பை போன்ற உறுப்புகள் எப்பொழும் இயங்கிக்கொண்டிருக்கும் [6]யாலானவை. புலியைக் காணும்பொழுது அச்சத்தால் இதயம் விரைவாகத் துடிக்கின்றது; இரைப்பை பிசைதல் குறைகின்றது. இங்கு, புலித்தோன்றல் ஊன்றலாகும்; இதயம் விரைந்து துடித்தலும் இரைப்பை உணவைப் பிசையாது நிற்றலும் எதிரூன்றல்களாகும். முன்னதில் செயற்படுவது [7] எதிரூல்; பின்னவற்றில் செயற்படுவது[8] எதிரூன்றல்.

இரயில் வண்டி பயணத்தில் கரிப்பொரி கண்ணில் விழுகின்றது. உடனே கண்ணிர்ச் சுரப்பி அப்பொரியைக் கழுவும் நீரினைச் சுரப்பிக்கின்றது. இனிய உணவினைக் கண்டதும்


  1. தூண்டல்கள்-Stimuli
  2. எதிா்துவினை-Reaction
  3. இயங்குவாய்கள்-Effectors
  4. இயக்குதசைகளின்-Voluntary muscle
  5. (இதயம்)-Heart
  6. இயங்குதசை-Involuntary muscle
  7. தசைக்கிளர்ச்சி-Accelerator
  8. தசைத்தடை-Inhibition