பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதனும் சூழ்நிலையும்

33


வேண்டும். குழந்தை சூழ்நிலைக்குப் பொருத்த முறுதலில் உடற் செயல் வகைகளையும் உள்ளச் செயல் வகைகளையும் காண்கின்றோம். தும்முதல், சூடான பொருளினின்றும் கையை விரைவாக இழுத்துக்கொள்ளுதல் போன்றவை எளிதான நடத்தைக் கோலங்கள்; இவை உடல் செயல் பற்றியவை. மூளையின் முழு வேலையின்றியே இவை நடைபெறும். உள்ளச் செயல்களை உற்று கோக்குங்கால் அவற்றில் அறிவுக் கூறு[1] , உணர்ச்சிக் கூறு[2] முயற்சிக் கூறு[3] என்ற மூன்று கூறுகள் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக, கம்பராமாயணத்தில் நகர் நீங்கு படலத்தைப் படிப்பதில் சில செய்திகளை அறி கின்றோம்; இன்பமோ துன்பமோ பெறுகின்றோம்; அப் படலத்தைப் படிப்பதில் முயற்சி கொள்ளுகின்றோம் அல்லது அதைத் தள்ளிவைத்துவிட்டு வேறு எதிலோ ஈடுபடுகின்றோம். இச் செயலில் இம்மூன்று கூறுகளில் அளவில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். இது சிக்கலானதொரு கோலமாகும். இங்ங்னமே ஒரு கணிதக் கோட்பாட் டைத் தீர்ப்பதும் சிக்கலான கோலமே. இவை இரண்டும் உண்மையிலேயே மூளையின் செயலாகும், அவ்வப்பொழுதிருக்கும் மனநிலைகளுக் கேற்றவாறு மூளைச் செயல்களில் இந்த முன்று கூறுகளில் ஒன்று மீதுார்ந்தும் மற்ற இரண்டும் தாழ்ந்தும் இருக்கும். ஆனால், ஒவ்வொரு நடத்தைக் கோலமும், அது எளிதாயிருப்பினும், அன்றி, சிக்கலாக இருப்பினும், தூண்டவின் புகுவாய்க்கும் இயங்கு வாய்க்கும் உள்ள நரம் புப் பாதையாலேயே இயற்றப்பெறல் வேண்டும். தனியாள் வளரவளர இந் நடத்தைக் கோலங்கள் மிகவும் சிக்கலாகின்றன.

மனிதன் ஒர் உயர்ந்த உயிரி. ஆகவே, தனித்துரண்ட லொன்று ஒரு தனிப்புகுவாயில் செயற்படுகின்றது என்று எண்ணுவது தவறு. ஒரு தூண்டற் கோலத்தில் ஒரே சமயத்தில் பல தூண்டல்கள் உள்ளன. காரைக்குடியில் வேனிற்காலத்தில் ஒருநாள் அழகப்பா பயிற்சிக் கல்லூரி நூலகத்திலிருக்கும் மாணாக்கன் ஒருவன் பலவகையில் தூண்டப் பெறுகின்றான். அவன் அண்மையில் நடைபெறவிருக்கும் தேர்வின் பொருட்டு ஒரு முக்கிய வினாவிற்கு விடை தேடுகின்றான். கையிலுள்ள நூலைப் பார்த்து உணர்கின்றான். ஒரு மூலையில் இரண்டு பேர் பேசுவதைக் கேட்கின்றான். சாளரத்தின் வழியாகப் பரந்த பொட்டலிலிருந்து வீசும் வெப்பக்காற்றை உணர்க. உ. கோ.3

  1. 35. அறிவுக் கூறு-Knowing aspect,
  2. 36. உணர்ச்சி கூறு-Feeling aspect.
  3. 37. முயற்சிக் கூறு-Willing aspect.