பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

கல்வி உளவியல் கோட்பாடுகள்


முகுளத்திற்கும் உள்ள இடைவெளியில் அமைந்துள்ளது. இரு அரைக்கோள வடிவமானது. இது உடலின் அசைவுகளை ஒழுங்குபடுத்தி அதன் சமநிலையைக் கண்காணிக்கின்றது. நாம் நிற்கும்போதும், நடக்கும்போதும், காலால் உதைக்கும் போதும் சாய்ந்து விழாதபடி காக்கின்றது; உடலில் கோலத்தை [1] வனிப்பதும் இதுவே.

சிறுமூளைக்கு மேலாக, <b‘>பாலம்’ [2] என்றதொரு பெரிய அமைப்பு உள்ளது. இது நரம்பு நார்களாலும் நுட்பமான பொருத்தப்பாட்டு மையங்களாலும் ஆகியது. சிறுமூளைக்கும் பாலத்திற்கும் மேலாகப் பலவகை அடுக்குகள் அமைந்த சிறந்த இணைப்பு மையங்கள் உள்ளன. இவை உள்துடிப்புப் பொருத்தப்பாட்டிலும் உயிரி குழ்நிலையோடு பொருத்தமுறும் செயலிலும் அதிகப் பங்கு கொள்ளுகின்றன. இம்மையங்களைப் பற்றி நாம் அறிந்தது சிறுபகுதியே; அறியாதது பெரும்பகுதி உள்ளது. உடற்பாகுபாட்டு முறையில் அவற்றின் தொடர்புகளை இங்குக் கூறுவதற்கில்லை.

பாலத்தின் மேற்புறமாக நடுமூளை என வழங்கும் மூளையின் ஒரு பகுதி உள்ளது. அவ்விடத்தில்தான் அதிகமான மண்டை நரம்புகள்—சிறப்பாக கண் நகர்ச்சியுடன் தொடர்பு கொண்டிருப்பவை—தொடங்குகின்றன.

பெருமூளைக்குக் கீழே அமைந்திருப்பது பூத்தண்டு [3] என்ற உதவி மையம். இதன் முக்கிய வேலை பொறிகளிலிருந்து வரும் உள்துடிப்புகளை மூளைக்குக் கடத்துவதாகும். இதனுடன் இணைந்த துணைப்பூத்தண்டு, மேற்பூத்தண்டு [4] ஆகியவை உடல்வளர்ச்சியில் முக்கியப் பங்கு கொள்ளுகின்றன. மேற்பூத் தண்டுதான் பசி, தூக்கம், உடல் வழியாக வெளிப்படக்கூடிய உள்ளக் கிளர்ச்சி ஆகியவற்றை ஓரளவு கட்டுப்படுத்துகின்றது. மேலும் தன்னாட்சி நரம்பு மண்டலத்தையும் உயர் முறையில் கட்டுப்படுத்துகின்றது. இதனுடன் இணைந்திருப்பது அடிதலைச் சுரப்பி [5] எண்டோகிரீன் மண்டலத்தின் அரசன்போல் செயற்படுவது.

பெருமூளை: மானிட மூளையின் பெரும்பகுதி பெருமூளையே [6] இது மண்டையோட்டினுள் இரண்டு அரைக்கோளங்-


  1. கோலம்-Posture
  2. பாலம்-pons
  3. பூத்தண்டு-Thalamus
  4. மேற்பூத்தண்டு-Hypo-thalamus
  5. அடிதலைச் சுரப்பி-Pituitary gland
  6. பெருமூளை-Cerebrum