பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனிதனும் சூழ்நிலையும்

43

களாகப் பிரிவுபட்டுக் கிடக்கின்றது. இது நெருங்கி அமைக்கப் பெற்ற பெரும் நரம்பணுத் தொகுதிகளால் அமைந்தது. சற்றேறக்குறைய மண்டையோடு முழுவதையும் இது நிரப்புகின்றது. மனிதனின் மூளை மிருகங்களின் மூளையை விட (யானை, திமிங்கலம் நீங்கலாக)க் கனமாகவும் பெரிதாகவும் உள்ளது. யானைமூளையின் எடை சுமார் 12 இராத்தல்கள்; திமிங்கல மூளையின் எடை சுமார் 10 இராத்தல்கள், மனித மூளையின் எடை கிட்டத்தட்ட 3 இராத்தல்கள். உடல் எடையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், மனிதமூளைதான் யானை, திமிங்கலம் ஆகியவற்றைவிடப் பெரிதென்பது புலனாகும். பெரிதாகவுள்ள பெருமூளையின் காரணமாகவே,-சிறப்பாகச் சிறந்த முறையில் வளர்ந்துள்ள நெற்றிப்பிரிவின் காரணமாக—மனிதன் ஏனைய பிராணிகளைவிடத் தலைசிறந்தவனாக விளங்குகின்றான்.

பெருமூளையின் மேற்பரப்பைப் புறணி [1] என வழங்குவர் அதன் வெளிப்பரப்பு சாம்பர் நிறமானது; அங்கே உயிரணுக்கள் உள. கீழ்ப்பகுதி வெண்ணிறமானது; அங்கே நரம்புக் கம்பிகள்

உள்ளன. வெளிப்பரப்பில் பல மடிப்புகள் உள்ளன, மடிப்புகளின் அதிக எண்ணிக்கைக்கேற்ப அறிவும் அதிகமாக இருக்கும் என்பர். ஒவ்வொரு அரைக்கோளமும் வெடிப்புகளால் பல பாகங்களாகப் பிரிக்கப் பெற்றுள்ளது. முன்புறமாகவுள்ளது


  1. 63. புறணி-Cortex,