பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கல்வி உளவியல் கோட்பாடுகள்


களையும், அஃது ஈரம் புலராதபடி நீரரும்பி நிற்கும் கண்ணிர்ச் சுரப்பிகளும் கூடியதோர் உறுப்பேயாகும். ஏறக்குறைய முற்று உருண்டை வடிவாயிருத்தலின் அதனைக் கண்ணுண்டை[1] எனல் தகும். அஃது ஒரங்குலக் குறுக்களவுள்ளதாய்க் கட்குழியில்[2] பொதிந்து நிற்கின்றது. இதனுடைய முன்புறத்தே


1. கண் இமை; 2. கரு விழி (cornea); 3, முன் கணிர்; 4. விழித் திரை; 5. கழிநீர் வடிகுழல்; 6. மணித் தசைகள்: 7. பந்தகங்கள், 8. கண்.மணி, 9. பின் கணிர்; 10. வெள்ளை விழி; 1 1. தசை; 12. விழி அடி உறை; 13. கண்-திரை (கட்புலப் படாம்); 14. ஒளி யிடம்; 15. பார்வை நரம்பு.

மற்றொரு சிறிய உண்டையை உள்ளழுத்திப் பொதிய வைத்தாற்போலக் கருவிழி”[3] பிதுங்கித் தோன்றுகிறது. கண்ணுண்டை முப்போர்வை போர்த்து விளங்குகின்றது. கண்ணுண்டையின் காவற்குப் பயன்படும் வெள்ளை விழியே[4]:


  1. 92.கண்ணுண்டை --Eye ball
  2. 93.கட்குழியில்-Eye-socket
  3. 94.கருவிழி-Cornea.
  4. 95.வெள்ளைவிழி-Scelera.