பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதனும் சூழ்நிலையும்

53


அதனது திண்ணிய மேற்போர்வையாகும். இவ்வெள்ளை விழியோ கண்ணுண்டை முழுதும் சுற்றி நின்று, கருவிழியின் விளிம்புவரை வந்து அங்கே நின்றுவிடுகின்றது. கருவிழியோ ஒளி நுழை'[1] பொருளாகும். கண்ணுண்டையின் இடைநின்ற போர்வையோ குருதிக் குழாய்களும் நிற உயிரணுக்களும் தசைகளும் சேர்ந்த இருட்படாமாகும். அகப்போர்வையோ கண் நரம்பு படர்ந்து விரியும் புலப்படாமாகும். இது கண்திரை[2] என வழங்கப் பெறும் (படம் 11).

கண் ஒரு ஒளிப்பொறி : கண்ணை ஒரு நிழற் பொறியுடன்[3] ஒப்பிட்டுக் கூறலாம். ஒளிப்பொறியின் மேற்பெட்டி போன்றதே வெள்ளைவிழி. உள் தோன்றும் கறுப்புப் பூச்சுப் போன்றதே கண்ணுண்டையின் இடைப் போர்வையாகிய கரும்படாம்; அப் பெட்டிக்குள் பின்புறத்தே தோன்றுவதாகி ஒவியம் பொறிக்கும் பிலிம் போன்றதே கண்ணுண்டையின் அகப் போர்வையாய் விளங்கும் நரம்பு வடிவமான புலப்படாம். கண்ணுண்டையிலும் வில்லையுண்டு. அது கருவிழியின் பின்னே இருபுறம் குவிந்த வடிவில் அமைந்துள்ளது. அதுதான் கண்மணி[4]" என வழங்கப்பெறுவது. அஃது ஒளிநுழை பொருள். ஆறு மணித் தசைகள்[5]' அதனைச் சுற்றி நின்று அதன் வடிவைத் தட்டையாக்கியும் பருமனாக்கியும் வேண்டியபடி திருத்தியமைக்கின்றன. கண்.மணிக்கு முன்னிடத்தும் கரு விழிக்குப் பின்னிடத்தும் கருவிழிப்புனல் நிறைந்துள்ளது. இதனை முன்-கணிர் [6]என வழங்குவர். இது நீர் போன்ற தெளிவான பாய்மம்' [7], உப்புநீர் போன்றது. இது ஒளி நுழை பொருளேயாகும். இது நீர் வடிவாய் இருப்பதால் கண்.மணி தட்டையாய் நீளவும், தடித்துக் குறுகவும் இடங் கொடுக் கின்றது. கண்.மணிக்குப் பின்னிடத்துள்ள பெரும் பகுதியில் கூழ் போன்ற பொருள் நிரம்பியுள்ளது. இது பின்.கனிர்[8]

.


  1. 96.-ஒளி நுழைTransparent
  2. 97.கண்திரை-Retina.
  3. 98.99.-Lens.-Camera
  4. 99.கண்மணி-lens.
  5. 100.மணித் தசைகள்-Ciliary muscles.
  6. 101.முன்-கணிர்-Acqueous humor.
  7. 102. பாய்மம்-Fluid.
  8. 103.பின்.கனிர்-Vitreous humor.