பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி உளவியல் கோட்பாடுகள்

56


இழைகள்[1] B என்ற இரட்டைத் துருவ உயிரணுக்களை அடைகின்றன. இரட்டைத் துருவ உயிரணுக்களே G என்ற நரம்பணுத்திரளில் ஒன்று சேர்கின்றன. நரம்பணுத்திரளின் இழைகள் நரம்புத் துடிப்புகளை மூளையிலுள்ள "பூத் தண்டு.[2] 18 என்ற பகுதிக்குக் கொண்டு செல்லு கின்றன.

காட்சிப் பிம்பங்கள் : புறவுலகிலுள்ள ஒரு பிம்பம் ஒர் ஒளிக்கோல மாகக் காணப்படு கின்றது. முதலாவதாக ஒளி கருவிழியை அடைகின்றது. அது விழித் திரை என் னும் புழையினுாடே செல்கின்றது விழித்திரை என்பது கரு விழியின் நடுவில் கரும்புள்ளிபோல் காணப்படுவது. அதன்




அளவு மடக்குச் செயலால் சுருங்கியும் விரிந்தும் உட்செல்லும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகின்றது. அதன்மூலம் மங்கலும் பிரகாசமுமான பிம்பங்கள் கிடைக்கின்றன. இதன்


  1. 112.இழை-Fibre.
  2. 113.பூத்தண்டு-Thalamus