பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கல்வி உளவியல் கோட்பாடுகள்


எடுத்துச் செல்லப்பட அங்கும் அதற்கியைந்ததொரு நரம்பணுக் கோலம் தூண்டப்பெறுகின்றது. நரம்பணுவின் வேதியியல் எதிர்வினைத் துடிப்புகள் ஏறக்குறைய மணிக்கு 150 மைல் வேகத்தில் செல்லுகின்றன. அவற்றின் அதிர்வு-எண்[1] கொள்வாய் நிலையையும் ஒளித்துரண்டலின் உறைப்பையும்[2]' பொறுத்தது. அதிகமாயிருந்தால் இத் துடிப்புகள் விரைவில் ஒன்றையொன்று தொடர்கின்றன. அதிக ஒளியினால் துடிப்புகள் பெரிதாகா; அவற்றின் தொடர்ச்சி வேகமே அதிகமாகும். ஒரு புலனுணர்ச்சி பெருந் தூண்டுதலால் வன்மை பெறக் காரணம் நரம்பணுக்கள் அதிகமாகத் துலங்குதலால் அன்று; விரைவாகத் துலங்குதலாலேயாகும்.

குருட்டிடமும்[3] ஒளியிடமும் கண் நரம்பு கண்ணின் பின் வழியாக வந்து பரவுகின்றது. அதுகண்ணுக்குள்ளே புகு மிடத்தில் கட்புலப்படாம் சிறிதும் இல்லை. ஆதலின் அதனைக் குருட்டிடம்' என்பர். கட்புலப் படாத்திலே உள்ள நடுவிடம், பாவையின் நடுவிடத்திற்கும் கண். மணியின் நடுவிடத்திற்கும் நேரே அமைந்துள்ளது. அவ்விடம் மஞ்சள் நிறமாக உள்ளது. அது சிறிது உட்குழிந்தும் விளங்குகின்றது. அங்குத்தான் கூம்புகள் மிகச் செறிந்துள்ளன. அங்குக் கோல்கள் இல்லை. ஆகவே, அதுதான் நாம் பொருளின் பிம்பத்தை விளக்கமாக ஏற்றுக் கொள்ளும் இடமாகும். இதுவே ஒளியிடம்-[4] எனப் படுவது. இந்த இடத்தில்தான் நாம் ஒரு பொருளை நேரடி யாகப் பார்க்குங்கால் ஒளிக்கதிர்கள் சாதாரணமாகக் குவிகின்றன. ஒளியிடத்தில் குருதிக் குழல்களும் இணைக்கும் இழையங்களும் இல்லை. -

காணப்படும் பொருள் நேரே கண்ணின் நடுவிடத்தில் விழுவதால்தான் பல நிறங்களையும் பிரித்தறிகின்றோம். நடுவிடத்திலன்றி ஒரத்தில் விழுமானால் பல நிறங்கள் தோன்று வதில்லை. விளிம்பருகே வரவர நிறத்தோற்றம் குறைகின்றது. தோன்றும் நிறமும் நிறைவு நிறமாகாமல் குறைவு நிறமா கின்றது. விளிம்பிலே வெளிறைத்தான் (Gray) காண் கின்றோம்; நிறத்தைக் காண்பதில்லை. கூம்புகள் நடுவிடத்தே நெருங்கியுள்ளன; விளிம்பிற்கு அருகுவரையில் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வந்து இறுதியில் ஒன்றுமில்லாமற்-


  1. 116.அதிர்வுஎண்-Frequency
  2. 117.உறைப்பு-Intensity,
  3. 118குருட்டிடம்-Blindn spot.
  4. 119.ஒளியிடம்-Fovea.