பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

கல்வி உளவியல் கோட்பாடுகள்


யின் உறைப்பையும்[1] சுருதியையும் [2]பெறுகின்றோம். ஒலிக்குச் சுரகுணம்[3]' என்ற மூன்றாவது பண்பும் உண்டு. சுரகுணம் அதிர்வினைக் கொடுக்கும் அலையின் அமைப்பினைப் பொறுத்தது. யாழில் எழும் சுரகுணத்திற்கும் குழலில் எழும் சுரகுணத்திற்கும் வேறுபாடு உண்டு. எனவே, ஒரே சுருதி யுடனும் உறைப்புடனும் சீறியாழ் நரம்பிலிருந்தும் மூங்கிற் குழலிலிருந்தும் உண்டாக்கப்பெறும் சுரம்[4] சுரகுண வேறுபாட்டின் காரணமாக வேறுபட்ட இரண்டு விளைவுகளைப் பெற்றுள்ளன.

இனி, கேள்விப் புலனுக்கு இன்றியமையாததாகவுள்ள காதினை ஆராய்வோம். ஒலியானது நம்முள் புகுவதற்கு வாயிற்படியாக விளங்குவதே செவிப்பொறியாகும். வள்ளை யைப்போலத் தலையின் இரு புறத்தும் தோன்றும் உறுப்பினை மட்டும் காது' என்று உலகவழக்கில் வழங்கி வருகின்றோம். ஆனால், செவிப்பொறி இக் காது மட்டுமன்று; அஃது உள்ளே மண்டைக்குள்ளும் சென்று அமைந்துள்ளது. அச் செவிப்பொறி மூன்று பிரிவுகளாக விளங்குகின்றது. அவற்றை நாம் புறச்செவி, இடைச்செவி, உட்செவி என வேறு பிரித்து வழங்குவோம். -

புறச்செவி : வெளியே தோன்றும் காதுமடலும் ',[5] வெளியிலிருந்து செவிப்பறைவரை செல்லும் முக்கால் அங்குல நீளமுள்ள புறச்செவிக்குழலும் சேர்ந்த அமைப்பே புறச்செவி என்பது. அவை மண்டைக்குள்ளே போய் முடிகின்றன. இந்த இரண்டு உறுப்புகளும் வெளியிலுள்ள ஒலி அலைகளைத் திரட்டி செவிப்பறைக்கு அனுப்பத் துணை செய்கின்றன. செவிப்பறையே புறச்செவியின் உள் எல்லையாகும்,

இடைச்செவி ;செவிப்பறைக்கும் உட்செவிக்கும் இடையே யுள்ள ஒரு குறுகலான அறையாகும் இது. இதற்குப் புற எல்லையாகச் செவிப்பறையும், அக எல்லையாகச் சிறியதோர் என்புச் சுவரும் திகழ்கின்றன. இவ்விரண்டு எல்லைகட்கும் இடையே மூன்று சிறிய எலும்புகள் ஒன்றோடொன்று பிணைந்து தொடர் போல் விளங்கிச் செவிப்பறையையும் அவ்வென்புச் சுவரையும்

.


  1. 138.உறைப்பை -Loudness,
  2. 139.சுருதி -Pitch.
  3. 140.சுரகுணம்-Timbre.
  4. 141.சுரம் -Note
  5. 142,காதுமடலும் -Pinna,