பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

கல்வி உளவியல் கோட்பாடுகள்


அதிர்ச்சி பாதிக்கப்பெற்று அரைச்செவிடு நேரிடலாம். சில அதிர்ச்சி மட்டிலும் காற்றின் வழியாக அனுப்பப் பெறலாம்.

இடைச்செவி, நடுச்செவிக் குழல்' [1]என்னும் நீண்ட மென்மையான குழவினால் தொண்டையுடன் இணைக்கப் பெற்றுள்ளது. நாம் விழுங்கும்பொழுது அல்லது கொட்டாவி விடும்பொழுது காற்றை இந்தக் குழலுக்குள் பலமாகச் செலுத்திக் காதில் காற்றை நிறைவிக்கின்றோம். இதனால் செவிப்பறையின் இருபுறமும் காற்றின் அமுக்கம் சமப்படு கின்றது. சில சமயம் நாம் சனி பிடிப்பால் பீடிக்கப் பெற்றிருக்கும்பொழுது முன் தொண்டைவாயில்களைச் சளி அடைத்துக் கொள்ளுகின்றது. இந்நிலை நமக்குச் சிறிது அசெளகர்யத்தைத் தருவதுடன் இடைச்செவியிலுள்ள காற்றின் அமுக்கக் குறைவினாலும் செவிப்பறை உட்புறமாக; உப்பிக் கொண்டிருப்பதாலும் கேள்வியும் மந்தப்படுகின்றது. தொண்டையில் ஏற்படும் தொற்றினையொட்டி இடைச்செவியிலும் தொற்று ஏற்பட்டு காற்றிற்குப் பதிலாகச் சீழ் நிரம்பிவிடும். செவிப்பறையிலுள்ள மிகச்சிறிய சந்துவழியாக இந்தச் சீழ் வெளியேறி செவிப்பறையும் சுகப்பட்டுவிடும். எனினும், அடிக்கடி நேரிடும் தொற்றுநோயினால் செவிப்பறையின் அதிர்ச்சியும் எலும்புகளின் அதிர்ச்சியும் குறைந்து போகக் கூடும்,

உட்செவி: இடைச்செவிக்கு உட்புறத்தே விளங்குவதுதான் உட்செவி. அவ்வுட்செவி சுற்றுச் சுழற்சி வடிவாக அமைந் துள்ளது. அங்கே மூன்று வளையங்கள் சிக்கிக் கிடக்கின்றன. அவையே அதன் பின்புறம். அவையே நிலைப்புலப் பொறியாகவும் விளங்குகின்றன. ஆனால், முன்புறத்தே உள்ளவை தாம் ஒலிப்புலப்பொறிக்கு உயிரிடமாகும். முட்டைப் புழைக்கும் வட்டப் புழைக்கும் அடுத்தாற்போல் இரண்டு உண்டை வடிவ மான பிதுக்கங்கள் தோன்றுவதால் இடையே ஒரு பள்ளம் காணப்படுகின்றது. இஃது உட்செவியின் ஒரு பிரிவு. மற்றொரு பிரிவு நத்தையோடுபோல் விளங்குகின்றது. பிரிகயிற்றுத்தலை முடிபோல உள்ளே புரையாகவும், அடியில் அகலமாகவும், மேலே போகப்போக அகலம் குறைந்து நுனியில் சிறுத்த தாகவும், சுற்றினாற்போல் அமைந்ததாகவும் இது விளங்குகின்றது; ஆதலின் இதனைப் புரிமுடி (Spiral) எனலாம்.


  1. 146.நடுச்செவிக் குழல்' -Eustachian tube.