பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனிதனும் சூழ்நிலையும்

67


அண்னம், கன்னம் ஆகியவற்றின் அணைச்சவ்விலும் (ஈழைத் தோல்) அமைந்துள்ளன. ஒரு சுவையரும்பு (படம்-16) சிட்டத் தட்ட கழுத்துக் குறுகிய கூசாவைப்

போன்று உருளை வடிவமான நரப்ப அணுக்கள் சேர்ந்த தொகுதியாகும். கழுத்து வழியாக மேற்பரப்பிற்கு வரும் உயிரணுக்களில் மிக மெல்லிய உரோம அமைப்புகள் உள்ளன; அவைதாம் சுவையுள்ள திரவத்துடன் சம்பந்தப்படுகின்றன. எல்லாச் சுவையரும்புகளும் ஒன்று போலிருப்பதில்லை. சில கூசாவடிவினவாகவும் சில குழைவடிவினவாகவும் உள்ளன. சுவையறிதற்குத் துரண்டற் பொருள்கள் திரவப் பொருள்களாக மாறவேண்டும், திடப்பொருள்களும் உமிழ்நீரில் கரைந்து திரவப்பொரு ளாக மாறும்போதுதான் சுவை தருகின்றன. மூன்று மண்டை நரம்புகளிலிருந்து நரம்பு நார்கள் ஓடிவந்து நாவின் பல இடங் களிலுமுள்ள சுவையறியும் உயிரணுக்களைச் சேர்க்கின்றன. இந் நரம்பு நார்கள் வழியாகத்தான் கிளர்ச்சி, மூளையிலுள்ள சுவைப் புல எல்லையைச் சேர்கின்றது. -

பண்டையோர் சுவைகனை "அறுசுவை" என வகுத்திருந்த போதிலும் ஆராய்ச்சியாளர்கள் சுவைகளை நான்கு வகைகளாகவே பிரித்துள்ளனர். அவை: இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு (உப்பு) கைப்பு (கசப்பு) என்பன. சில குறிப்பிட்ட வேதியியல் பொருளைக் கொண்டு இவற்றில் ஒன்று அல்லது பலவற்றைச் செயற்படாது செய்யவும் கூடும்; எனவே, இவை யாவும் ஒவ்வொரு குறிப்பிட்ட சுவையரும்புகளுடன் உறவு கொண்டுள்ளன என்பதை அறிகின்றோம். நாக்கின் துணி எல்லாச் சுவைகளையும் அறிதல் கூடும்; ஆனால் அது கைப்பையும் இனிப்பையும் கூர்மையாக அறியக்கூடியது. நாக்கின் பின்பகுதி உவர்ப்புச் சுவையை அறிகின்றது. நாக்கின் இரண்டு பக்கப் பகுதிகளும் கைப்பையும் புளிப்பையும் நன்கு உணர்கின்றன. நாக்கின் மேற்பகுதியில் கூர்மையான உணர்ச்சி இல்லை; அவ்விடத்தில் சிறிது நேரம் கசப்பு மருந்தையும் வைத்திருக்கலாம். நாம் மருந்தை விழுங்கும்பொழுதுதான் அந்தக் கசப்பை அறிய முடியும். ஏதாவது ஓர் உணவை உண்ணும்பொழுது நாம் பெறும் சுவையநுபவம் இந்த நான்கு முதல் நிலைச் சுவை