பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனிதனும் சூழ்நிலையும்

71


சுடுபுலனின் புகுவாய் தோலின் உள்ளும் இருப்பது தெளிவா கின்ற்து. குளிர்புலன் போலத் தொடுபுலனும் மீந்தோற்புலனே யாகும். சுடுபுலன் போல உறுத்து புலனும் உள்தோல் புலனாம். இப் புலன்களின் புகுவாய்கள் உடலின் புறத்தே முழுதும் பரவி யுள்ளன. மயிர்க்கால்கள்தோறும் தொடுபுலனின் புகுவாய் உண்டு. கண், நாக்கு முதலிய உறுப்புகளிலும் இவை உள்ளன. உடலினுள்ளே உள்ள உறுப்புகளிலும் தொடுபுலப் புகுவாய் உண்டு. ஆனால், அவ்வுறுப்புகள் வெப்பமும் குளிரும் அறிவதாக ஏற்படவில்லை, தோலில் பரவியுள்ள புகுவாய்களின் அமைப்பைப் படத்தில் (படம்-1) காண்க. -

தொடுபுலன் . இதன் வழியாக வழுவழுப்பு, சுறசுறப்பு, தைவரல் (தடவுதல்), ஈரம் ஒட்டுதல் முதலிய வேற்றுமையை அறிகின்றோம். ஊறல் எடுத்தல், சுள்ளிடுதல் (tangle), கிலு கிலுத்தல் (tickle) முதலியனவும் தொடுபுலனின் வகையேயாகும். தொடுபுலன் கட்புலன் போலப் பலவகைப்படாது என்றாலும் சிறப்புடையதேயாகும். நம்மைச் சுற்றிலும் உள்ள பொருள் களைப்பற்றி அதன் வாயிலாகவே உணர்கின்றோம். இட வுணர்வு இந்தத் தொடுபுலனால்தான் ஏற்படுகின்றது.

சுடு புலன் கொதிநீரின் வெப்பத்தின் உறைப்பை 100 பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு சுழி (Degree) என்றே வழங்குகின்றனர். இவ்வாறு பிரித்துப் பல வகையான சூட்டு நிலைகளை அளந்தறிகின்றனர். நம் உடலின் வெப்பத்திற்குமேல் அரைக்காற் சுழி (') அளவு சூடுமிகினும் குறையினும், சுடுபுலனும் குளிர் புலனும் அந்த வேற்றுமையை அறிகின்றன. அரைக்காற் சுழிக்கும் குறைந்த வேற்றுமைகள் புலனாவதில்லை. தோலின்மீதுள்ள வெப்பப் புகுவாய்கள்[1] ஒரு குறிப்பிட்ட வீச்சளவிற்கே துலங்குகின்றன. வெப்பம் அல்லது குளிர்ச்சியைத் துண்டும் இத்துாண்டல்களின் மொத்த வீச்சளவு10°Cக்கும் 70°Cக்கும் இடையே அமைந்து கிடக்கின்றன. இந்த வெப்பநிலைகளுக்கு மேலோ கீழோ நாம் பெறும் துலங்கல் வலி யுணர்ச்சியே; அப்பொழுது இழையங்களின் [2]சிதைவு நேரிடு கின்றது. குளிர்புலனும் சுடுபுலனும் தொடுபுலன் அளவுக்குச் சிறந்தன அல்ல என்றாலும், அவை நம் துய்த்துணர்வைப் பல வகைச் சுவையாக்குவதற்குப் பயன்படுகின்றன.

கொப்புலன் : கிட்டத்தட்ட உடலின் எல்லாப் பகுதிகளின் எல்லாவித இழையங்களுடன் இப் புலன் உணர்ச்சியை எழுப்புதல்


  1. 1வெப்பப் புகுவாய்கள்-Thermal receptors.
  2. 152.இழையங்கள் -Tissues.