பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

கல்வி உளவியல் கோட்பாடுகள்



கைகள், மனப்பான்மைகள் முதலியவை அனைத்தும் கலந்து நிற்கும் மனப்பாங்கே ஆளுமை என்பது. அஃது அவற்றின் வெறுஞ் சேர்க்கை மட்டும் அன்று; அச்சேர்க்கையில் ஒருமைப் பாடு உண்டு. ஒரு மகனோ, மகளோ ஆளாக விளங்கும் தன்மையே ஆளுமையாகும். உயிர்ப் பொருள், உயிரில் பொருள் என்றவற்றிடம் காணப்பெறும் தன்மையைக் குறிக்க :இயல்பு என்ற சொல் வழங்கப்பெறுதலின் ஈண்டு நாம் குறிக்கும் தன்மையை யுணர்த்த ஆளுமை' என்ற சொல் மேற்கொள்ளப்பட்டது.

இராமனைக் கம்பன் ஆளுமைப் பண்புக் கூறுகள்? அனைத்தையும் கொண்ட ஒரு பெருமகனாகப் படைத் துள்ளான். அதுமன்மூலம் சுக்கிரீவன் இராம இலக்குமணர் களின் சிறப்பையெல்லாம் அறிகின்றான். இராம இலக்குமணர் தொலைவில், வரும்பொழுதே அவர்களின் புறத்தோற்றங்களில் ஈடுபட்டு நெடிது நோக்கு கின்றான். நான்முகன் படைப்புக் காலந்தொட்டு அன்றுவரை செய்த நல்வினைகள் யாவும் திரண்டு இரு வடிவங்களாகி விட்டன போலும் என்று எண்ணு கின்றான். இறுதியாக,

தேறினன் அமரர்க் கெல்லாம் தேவராம் தேவர் அன்றே மாறியிப் பிறப்பில் வந்தார்

மானிட ராகி மன்னோ; ஆறுகொள் சடிலத் தானும்

அயனும் என்(று) இவர்கள் ஆதி வேறுள குழுவை யெல்லாம்

மானுடம் வென்ற தன்றே.

என்று ஒரு முடிவுக்கு வருகின்றான். ஆளுமையின் பண்புக் கூறுகள் அவர்களிடம் ஒன்றேனும் குறைவின்றி யிருந்தமையால் சுச்கிரீவன் அவர்களைப் புருடோத்த மனது அவதாரமே என்று கருதுகின்றான். இங்ங்ணம் இராம இலக்குமணர்கள் ஆளுமையின் பண்புக் கூறுகள் நிறைந்தவர்களாகக் காட்சியளிக்கின்றனர். சமூகத்தில் கலந்து பழகும்பொழுதுதான், நாம் மேற்கூறிய இவ் ஆளுமைப் பண்புகளைக் காண முடிகின்றது. நாம் ஒருவரைக் குறிப்பிடுங்கால் ஒத்துப் போகும் இயல்புடையவர்: என்கின்றோம். இவ்வளவு மட்டிலும் சொன்னால் போதாது

2. பண்புக்கூறுகள்.Traits. 3. கிட்கிந்-நட்புக்கோள்.18.