பக்கம்:கல்வி நிலை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அறிவு 7

சய நிதியமாய் அறிவு மருவியுள்ளமையால் அதன் தலைமை

பும் நிலைமையும் அருமையும் பெருமையும் பேச வந்தன.

அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் என்னுடையர் ஏனும் இலர். (குறள், 430)

o

புறத்தே வேறுபொருள் இல ராயினும் அகத்தே அறிவு உடையவர் எல்லாச் செல்வங்களும் ஒருங்கே உடையவரே; உள்ளத்தில் அறிவு இல்லாதவர் உலகத்தில் எவ்வளவு செல் வங்களை எய்தி யிருந்தாலும் யாதொன்றும் இல்லாதவரே யாவர் என அறிவின் மகிமையை யாவரும் எளிதே அறியக் தேவர் இவ்வாறு தெளிவாக விளக்கியுள்ளார். இக்க விளக் கத்தில் அரிய பல சிந்தனைகள் விளங்கியுள்ளன. அறிவு கிலே யை அறிவது பெரிய அறிவாய் உரிமை தோய்ந்து வந்தது.

எல்லாம் அறிய வல்லவன் என்று இறைவனுக்கு ஒரு பெயர். ஆகவே அறிவு பரமான்மாவின் ஒளி என்பது தெளி வாய நின்றது. அந்த ஒளி சிவான்மாவிடம் துளியாய் வங் துள்ளது. அதனுல் மனிதன் அரிய பல கலைகளையும் பெரிய கிலைகளையும் அறிந்து கொள்ளுகிருன். அறிவு சிவ ஒளியாய் விளங்கித் தேவ அமுதமாய்ச் சுரங்து கிவ்விய இன்ப கலங் களை நன்கு அருளி எவ்வழியும் சீர்மை புரிந்து வருகிறது. அறிவன், கலைஞன், கவிஞன், ஞானி என உலகில் எழுகின்ற எவரும் அறிவின் பரிபாகத்தால் பெருகி வந்துள் ளனர். உயர்ச்சி நிலை உணர்ச்சியின் வளர்ச்சியாய் வந்தது.

அறிவு மனிதனுக்கு அரிய பெரிய ஒர் அதிசய செல்வ மாய் அமைந்திருக்கிறது. அதன் தெளிவுக்குத் தக்கபடி ஒளியும் இன்பமும் பெருகி வருகின்றன. அதனையுடையவன் எல்லாம் உடையவனப் இசை மிகப் பெற்றுள்ளான். அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/13&oldid=551939" இலிருந்து மீள்விக்கப்பட்டது