பக்கம்:கல்வி நிலை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நூ ல் 21

ஆன்ம உருக்கமும் அருளின் பெருக்கமும் மேன்மையும் பான்மையும் மேதக வமைந்து தெய்வமணம் கமழ்ந்து தேசு மிளிர்ந்து முந்தமிழ் தென்னச் செந்தமிழ் எழுந்துள அந்தமில் இன்புயர் அரிய நூல்கள் எந்த மொழியும் எய்தா நிலையில் நந்தம் மொழியில் நாமினி தடைந்து சந்ததம் பெருமை சார்ந்து தழைத்து வந்தமர்ந் துள்ளோம் வரவுகிலே புறவே. இந்தவாறு அரிபபல கலை நூல்களை நாம் உரிமையோடு பெற்றிருக்கிருேம். இருந்தும் தகுந்தபடி உணர்ந்து பிரிய முடன் பயின்று பேரின்பங்களை _து ம ல் அயலே மயலாய் கம்மவர் அவலமுற்று உழலுகின்றனர். தாய்ப்பால் இழக்க குழந்தைபோல் தாய்மொழி நூல்களை இழந்து நோய்ப்பா லுழந்துகொந்துதவிப்பது சிந்தையை வருக்கி வருகின்றது. அறிவு நால் மனித வாழ்வைப் புனிதப்படுத்தி இனிமை யாக கடத்தி வருகிறது. அரசனது ஆணைக்குக் கீழ்ப்பக்தி குடிகள் ஒழுகி வருகல்போல நூலினது விதிகளை நோக்கிக் சால்புடன் கடந்து வருபவர் மேலோராய் விளங்கி வருகின் றனர். ம.கி நால் ஒழுக்கம் மகிமைகளை விளைத்தருளுகிறது. மானிடர் உள்ளத்தில் ஒரு ஞானச் சட்டமாய் கின்று அவரது வாழ்க்கையை இனிது கடத்தி இதம் புரிந்து வருக லால் நூலுக்கு அதிகாரம் என்று ஒரு பெயரும் வந்தது.

'அதிகாரம் பிடகம் ஆரிடம் தந்திரம்

பனுவல் ஆகமம் சூத்திரம் நூலே (பிங்கலந்தை) அாலுக்கு இவ்வாறு ஏழு பெயர்கள் பிங்கல முனிவர் -காலத்தில் வழங்கி வந்துள்ளன. மனிதன் நெறிமுறையோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/27&oldid=551953" இலிருந்து மீள்விக்கப்பட்டது