பக்கம்:கல்வி நிலை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாருடைய இல்லங்களிலும் நல்ல நூல்கள் நிறைந்த பொழுதுதான் இந்த நாடு சிறந்த சீருடையதாய் உயர்ந்து விளங்கும். உணவும் உடையும் உடலுக்கு அவசிய தேவை: அதுபோல் உணர்வு நால்கள் உயிருக்கு மிகவும்தேவையாம். நல்ல வாய்ப்புகள் அமைக்கிருந்தும் பலர் கல்லாமல் விணே காலத்தைக் கழித்து விடுகின்றனர். உல்லாச வினுேதங்களி அம் பொல்லாத போகங்களிலும் மோகம் கொண்டு கிரித லால் மூட இருள் அவரைக் கூடவே சூழ்ந்து கொள்ளுகின் றது. அவரது வாழ்வும் சூழ்வும் வசைபடிந்து மடிகின்றன. காவின் சுவையில் சைகர்ந்து வருதலால் பாவின் சுவையில் பலன் காணுது போயினர்; போக்வே அவரது போக்கும்

நோக்கும் ஆக்கம் இழந்து அவலம் அடைய நேர்ந்தன.

செவியின் சுவை உணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்? (குறள், 420)

அறிவு நூல்களின் சுவைகளை உணராமல் உணவின் சுவைகளையே அவாவி அலையும் மானிடர் இருந்தால் என்ன? செத்தால் என்ன? என்று வள்ளுவப் பெருந்தகை இப்படி வயிறு எரிந்து வைதிருக்கிருர் வயிற்றெரிச்சலோடுவங்கிருக் கிற இந்த உரைக் குறிப்புகளை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். அருளாளர் வாய்மொழி பொருளாழமுடையது.

சிறந்த மனிதப் பிறவியை அடைந்திருந்தும் தகுந்த அறிவு கலங்களை அடைந்து கொள்ளாமல் வீணே இழிந்து போதலால் அவரது இருப்பு வெறுப்பாயது. தன் உயிர்க்கும் பயன் இன்றி, பிற உயிர்கட்கும் யாதும் உதவிபுரிய முடியா மல் மடையன் வறிதே வளர்ந்து கிரிகிருன்; அவன் நிலை பயன்பாடில்லாத படு புல ஆதலால் இங்ஙனம் பழிக்கப் பட்டான். பழிப்பு உரை விழிப்பை விளைக்க எழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/37&oldid=551963" இலிருந்து மீள்விக்கப்பட்டது