பக்கம்:கல்வி நிலை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நூல் 35

பொழுதுமட்டும் சிறிது சுவையாய் அவை வறிது கழியும்; இது கருதும் போதெல்லாம் பெரிதும் சுவையாய்ப் பேரின் பம் பயங்குவரும். அவை உடலைக் கொழுக்கச் செய்து மய லில் ஆழ்த்தும்; இது உயிரை வளர்த்து உயர் நிலையில் ஏத்தி யருளும்.புக்கிதத்துவத்தில்அனுபவிப்பது ஆதலால் தாலின் சுவை முக்தி இன்பம்போல் என்றும் மூவா முதன்மையை

மேவி மிளிர்கிறது. உணர்வின் நுகர்வு உயர்போகம்ஆகிறது.

தேக போகங்கள் மோக வெறிகளாய் முடிகின்றன; ஆன்மபோகம் அறிவின் சுவையாய் அதிசய நிலையில் உயர் கின்றது. பொறி இன்பங்களை நுகருந்தோறும் பொருள்கள் கேய்ந்து மருள்களே விரிகின்றன. அறிவின் சுவையை துக ருவகால் அருள் கலஞ் சாந்து அறமும் இன்பமும் பெருகி

வருகின்றன. அவ் வாவால் உயிர் உயர்நிலை புதுகின்றது.

“In the pursuit of intellectual pleasures lies every .rtuc; of sensual, every vice.” [Goldsmith]

அறிவின் சுவையில் அறம் வளர்கின்றது; பொறி .நுகர்ச்சியில் மறம் விளைகின்றது” என்னும் இது இங்கே அறிய வுரியது. தேக சுகங்கள் அவிவேகமான மயக்கங் களாகின்றன. விவேக விளைவு வியன் கதியாய் விரிகின்றது.

தாலின் நுகர்வு உணர்வு கலங்களை உதவி உயர்ந்த విజు களில் உய்த்தருளுகின்றது. உயிர்க்கு உய்தி புரிந்து வருத லால் தாலுணர்வு மனிதனுக்குப் புனித போகமாய் கின்றது. உலக போகங்கள் எவற்றினும் இது தலைமையாய் நிலவி அரிய பல உவகை வளங்களை நெறியே அருளி யுள்ளது.

தேகபோகம் அருந்தல் பொருந்தல் என இருவகை நிலை களில் அமைந்துளது. அவை நன்கு அமையும் பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/41&oldid=551967" இலிருந்து மீள்விக்கப்பட்டது