பக்கம்:கல்வி நிலை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. க ல் வி 4。

மனித உருவில் மருவியிருந்தாலும் கல்வியறிவுடையவன் தனியான ஒரு தெய்வீக நிலையில் உயர்ந்து கிற்கின்ருன். அவனுடைய உணர்வுக் காட்சியில் உண்மைப் பொருள்கள் எண்மையாய் உரிமையோடு ஒளி புரிந்து வருகின்றன. எல்லா வழியாலும் எவ்வகையாலும் அறிய முடியாத பாம் அனும் கல்வியறிவில் கனிந்துவந்து இனிது தோன்றுகின்ருன்.

'கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி'

என இறைவனேக் குறித்து ஒரு பெரியவர் இப்படிப் பாடி யிருக்கிரு.ர். கற்பின் அகத்தில் கற்பகம் கனிவது அற்புத விளைவாயமைந்தது. உரியதில் அரியது ஒளி செய்துள்ளது.

'கற்றவர் வ8ளத்துத் திரிபுரம் எரித்தோன்

கற்றவர் கருத்தினுல் காண்போன்’ (பாரதம்)

மேருமலையை வில்லாக வளைத்துத் திரிபுரம் எரித்த சிவபெருமான் கல்வியாளர் உள்ளத்தில் காணும் காட்சிப் பொருள் என இது காட்டியுள்ளது. கல்-மலை. தவர்-வில். கல்லை வில்லாகக் கொண்டு பொல்லாதவர்களை அழித்து எல் லாம் வல்லவனுய் எங்கும் என்றும் விளங்கும் அவனும் கல்வியறிவில் தனி உரிமையாக இனிது மருவியுள்ளான் என்றதனுல் கல்வியின் மாட்சியும் காட்சியும் இங்கே நன்கு காணவந்தன. தெய்வநிலையமாயுளது கிவ்விய மகிமையாயது.

இறைவன் வாலறிவன் ஆதலால் நூலறிவாளரோடு அவன் சாலவும் உறவுரிமையுடன் தொடர்பு கொண்டுள் வான். ஆகவே கலை ஞானிகளுடைய கலைமையும் நிலைமை பும் தகைமையும் வகைமையும் தொகையாக அறியலாகும்.

சூரியன் இருளை நீக்கி உலகை ஒளிசெய்து வருகிருன்: கல்வி மருளை நீக்கி உயிரை ஒளிசெய்து வருகிறது. பாமாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/51&oldid=551977" இலிருந்து மீள்விக்கப்பட்டது