பக்கம்:கல்வி நிலை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6: கல்விாகி 2ல்

துமாவின் ஒளிவிழயாய அவன் உலாவி வருகிருன் இது. -சிவாத்தும்ாவின் தெளி விழியாய்ச் சிறந்து திகழ்கின்றது.

எண்ணும் எழுத்தும் உயிர்க்குக் கண். எனத் தேவர் இவ்வண்ணம் கல்வியைக் குறி த்திருக்கிரு.ர்.

'கற்றறிவாளர் கருத்தில் ஒர் கண் உண்டு’ என்று கல்வியின் ஒரு மூல நிலையைத் திருமூலர் இவ்வாறு. உாைத்தருளினர். உரைக் குறிப்புகள் ஊன்றி உணரவுரியன.

ஊனக்கண் போல ஒருநோக்கோ கல்விஎனும் ஞானக்கண் கோடி நலநோக்கும்---வானக்கண் நின்ருெளிரும் ஆதவனும் நேராக இக்கண் எதிர் நன்ருெளிரும் அன்ருே நயந்து. கல்வி ஞானக் கண்; அது பல கோடி காட்சிகளை எக காலத்தில் காணவல்லது; ஆயிரங் கிரணங்களையுடைய வான சூரியனும் இந்த ஞான சூரியன் எகிரே மோனமா வியந்து. கிம்பன் எனக் கல்வியின் நிலையை இது உவந்து கூறியுளது.

சென்ற காலங்களையும், நிகழ் காலங்களையும், வருங். காலங்களையும் நெடிது நோக்கி அளவிடலரிய பொருள் நிலை. களைக் கருதிக் காணும் அரிய அதிசயக் காட்சிகளையுடையது. ஆதலால் நாலோரும் மேலோரும் கல்வியைக் கண் என்று. உரிமையுடன் உவந்து பெருமையாக் கூற நேர்ந்தார்.

மிகவும் அருமையான பொருளை க் கண் என்றும், உயிர் என்றும் பிரியமாகப் புனைந்து சொல்வது மனித இயல்பு. ஆதலால் அந்த உரிமையில் கல்வி இங்கே உரையாட வங் தது. உரைக் குறிப்பு உயர்ச்சி நிலையை உணர்த்தியுள்ளது. என் கண்; என் உயிர் எனத் தனது அருமை மகளுன இராமன்க் தசரதன் உளம் உருகி உரைத்திருக்கிருன். தச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/52&oldid=551978" இலிருந்து மீள்விக்கப்பட்டது