பக்கம்:கல்வி நிலை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கல்வி கி 2ல்

தன் பிள்ளைக்கு ஐந்து வயது ஆனவுடனே தங்தை அவ. னேப் பள்ளியில் படிக்க வைக்கிருன் பாலன் போய்ப்படித்து வரும் இடம் பள்ளிக்கூடம் என வழங்கப்படுகிறது. கலை. பயிலும் நிலையம் அதன் தலைமையை விளக்கி கிற்கின்றது.

பள்ளி என்னும் சொல் உள்ளம் உயர்ந்த சிறந்த முனி வர்கள் வசிக்கும் ஆசிரமத்தைத் தனியுரிமையாக் குறித்து வரும். மதிநலம் மிகுந்த அத்தகைய பெரியோரையே ஆசிரி யாாகப் போற்றி அவரிடம் கொண்டுபோய்த் தம் மக்களை ஒப்பித்துவிடுவது பெற்ருேர் வழக்கமாப் பண்டு இருந்து வங் தது. ஆதலால் பிள்ளைகள் படிக்கும் இடம் பள்ளி என வழங்: கிவாலாயது. வளமை வழக்கு பழமையைத் துலக்கியுளது.

எமாங்கத நாட்டு மன்னன் மகன் ஆகிய சீவகை

இளமையில் பள்ளியில் வைத்த முறையும், அவன் பல கலை. களையும் படித்து உயர்ந்த நிலையும் சீவகசிந்தாமணி என்னும்: காவியத்தில் ஒவியமா வடித்துக் காட்டப்பட் டுள்ளன. அரும்பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணி ஆகப் ப். தெலாப் பிரப்பும் ைவத்துப் பைம் பொன் செய கவிசின் உச்சி இருந்துபொன் ஒலே செம்பொன் ஊசியால் எழுதி ஏற்பத் திருந்துபொற் கண்ணியாற்குச் செல்வியைச்சேர்த்தினரே.

நாமகள் நலத்தை எல்லாம் நயந்துடன் பருகி நன்னூல் ஏமுதலாய் எல்லாப் படைக்கலத் தொழிலும் முற்றிக் காமனும் கனிய வைத்த புலம்கரை கண்டு கண்ணுர்

பூமகள் பொலிந்த மார்பன் புவிமிசைத் திலகம் ஒத்தான்.

(சீவக, நாமகள் இலம்பகம்) சிவகன் பல்கலைகளையும் பயின்று கல்வியறிவில் சிறந்து இவ்வுலகில் ஒரு திலகமாய் உயர்ந்து விள்ங்கினன் என்பை த இதனுல் உணர்ந்து கொள்கிருேம். சிறந்த மகளுய்ப் பிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/54&oldid=551980" இலிருந்து மீள்விக்கப்பட்டது